காங்கிரஸ் பேனரில் பாஜக நிர்வாகியின் படமா ? அதிர்ச்சி அளித்த காங்கிரஸ் !

காங்கிரஸ் பேனரில் பாஜக நிர்வாகியின் படமா ? அதிர்ச்சி அளித்த காங்கிரஸ் !

Share it if you like it

மக்களைவை தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு ஓட விடுகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பேன ரில் பாஜக வேட்பாளரின் புகைப்படத்தை அச்சடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர் காங்கிரஸ் கட்சினர்.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 6 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ல் நடைபெறுகிறது. இதில் மாண்ட்லா தொகுதியில் மத்திய அமைச்சரும் ஆறு முறை பா.ஜ.க எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் முன்னாள் அமைச்சரும் நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஓம்கார் சிக் மார்க்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில், பக்கன் சிங் குலாஸ்தே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் மோதுவதால் போட்டி கடுமையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கார் சிக் மார்க்கமை ஆதரித்து ராகுல் அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் புகைப்படத்துடன் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகளின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் குலாஸ்தே படமும் இருந்ததால் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட கட்சியினர் பா.ஜ.க வேட்பாளரின் படத்தின்மீது வேறொரு காங்கிரஸ் நிர்வாகியின் படத்தை ஒட்டி மறைத்தனர். தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் கூட தெரியாமல் அவரின் படத்தையும் சேர்த்து பேனர் அச்சிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சினருக்கே அவர்கள் நிர்வாகிகள் யார் பாஜக நிர்வாகிகள் யாரென்று தெரியவில்லை. இவர்கள் கையில் ஆட்சி குடுத்தால் நாட்டின் நிலை அரோகதிதான் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it