லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதன்படி, பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள கட்சி தலைவர்களின் படங்கள், பேனர்கள், கொடிகள் அகற்றப்பட்டு, சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இருப்பினும், விதிமுறை மீறி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர், கொடிகள் உள்ளிட்டவையும் அகற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட பல பகுதியில், ஆளும் கட்சி பேனர்கள், போஸ்டர்கள், கட்சித் தலைவர் படங்கள் உள்ளிட்டவை இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் வந்து செல்லும் நெடுஞ்சாலைகளில் தான் இது போன்ற விதிமீறல்கள் உள்ளன.
இருப்பினும், அதிகாரிகளின் கண்களில் மட்டும் இவை படவில்லையா அல்லது ஆளும் கட்சிக்கு மட்டும் தேர்தல் விதிமீறலில், சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக இணையதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.