சமீபத்தில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சி ஒன்றை ஆரம்பித்து 2026 தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். ஆனால் விஜயின் கட்சி பெயரில் பிழை உள்ளதாக தமிழ் அறிஞர்கள் அரசியல் பிரமுகர்கள் கூற பிழையை திருத்தி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்றினார்.இந்த சம்பவத்தால் விஜயை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் கமல் ஆரம்பித்து வைத்திருக்கும் கட்சியின் பெயரிலும் பிழை உள்ளதாக தமிழ் பேராசிரியர் ஒருவர் பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் நீதி மையம் என்று தான் வைத்திருக்க வேண்டும். அதை விடுத்தது மக்கள் நீதி மய்யம் என்று பிழையாக வைத்துள்ளார். உண்மையில் “மய்யம்” என்றால் பிணம் என்று பொருள் என்று அதிர்ச்சிகரமான தகவலை முன்வைத்துள்ளார்.
தம் கட்சியின் பெயரையே சரியாக வைக்க தெரியாத கமல், விஜய் ஆகியோர் எப்படி நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி நல்ல ஆட்சியை கொடுக்க முடியும். ஆனால் இவர்கள் தான் தமிழையே தூக்கி வளர்த்தார்கள் என்ற அளவிற்கு மேடை பேச்சுக்களில் பேசும்போது பில்டப் கொடுப்பாங்க என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
https://x.com/vaisu_tweets/status/1769398225629290593?s=20