ஈஷா யோகா மையம் எந்தவிதமான இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை தமிழக அரசு பதில் – மெளனம் காக்கும் போராளிகள்..!

ஈஷா யோகா மையம் எந்தவிதமான இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை தமிழக அரசு பதில் – மெளனம் காக்கும் போராளிகள்..!

Share it if you like it

ஈஷா யோகா மையம் எந்தவித வனவிலங்குகளின் வழித்தடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை தமிழக அரசு

யோகா, தியானம், ஆன்மீகம், பாரத கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை உலக மக்களுக்கு தொடர்ந்து கற்று தரும் பணியில் இன்று வரை ஈஷா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் மக்கள் பணி, ஆன்மீக பணி, சமுதாய பணி, என தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஈஷா மையத்தின் மூலம் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இவரின் சேவையை பாரத தேசத்தையும் கடந்து உலக நாடுகள், இன்று வரை பாராட்டி கொண்டு வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தி.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள், போராளிகள், அரசியல்வாதிகள், போலி சமூக ஆர்வலர்கள், என தொடர்ந்து ஈஷா மையத்தின் வளர்ச்சியையும், அதன் எழுச்சியையும், தடுக்கும் விதமாக பல்வேறு பொய் கதைகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பி வந்தனர்.

ஈஷா மையம் சட்டத்திற்கு புறம்பாக ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை. ஆதாரம் இருப்பதாக கூறுபவர்கள் அதனை நிருபிக்க முன்வந்தால், அந்த இடத்தை அப்படியே கொடுத்து விடுகிறேன் என்று பகீரங்கமாக சவால் விடுத்து இருந்தார் சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனால் இச்சமயம் வரை எந்த ஒரு போராளியும் அதற்குறிய ஆதாரத்தை வழங்காமல், ஈஷா மையத்தின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்புவதையே நோக்கமாக கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஈஷா மையம் குறித்து, RTI-யிடம் கேள்வி எழுப்பபட்டது. ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையம் வனப்பகுதியில் எந்தவிதமான இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஈஷா மையத்தின் மீதும் சத்குரு மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், போலி சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் போன்றவர்கள் ஜக்கி வாசுதேவிடம் மன்னிப்பு கேட்க முன்வருவார்களா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it