ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் இணைந்த பிரிட்டனை சேர்ந்த இளம் பெண்ணின் குடியுரிமையை அந்நாடு பறித்து இருப்பது உலகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
ஷமிமா பேகம் இவர் பிரிட்டனை சேர்ந்தவர். இவர், கடந்த 2015 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தார். இவருடன், லண்டனை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகளும் சிரியாவுக்குச் சென்றனர். அப்போது, ஷமிமா பேகத்திற்கு வயது 15 என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு ஷமிமா பேகம் சிரியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும், ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணாக சிரியா அகதிகள் முகாமில் இருந்துள்ளார். இதையடுத்து, தான் மீண்டும் பிரிட்டன் திரும்ப விரும்புவதாக அந்நாட்டிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். எனினும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து, பிரிட்டன் அரசின் முடிவை எதிர்த்து நீண்ட சட்ட போராட்டத்தை அவர் நடத்தி இருக்கிறார். அந்த வகையில், சிறப்பு குடியேற்ற மேல்முறையீட்டு ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார். இந்நிலையில், அவரது வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, ஷமிமா பேகத்தின் வழக்கை தாங்கள் தள்ளுபடி செய்வதாக அந்த தீர்ப்பாயம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.