தடுக்க வேண்டியவர்களே… தவிக்க விடலாமா?

தடுக்க வேண்டியவர்களே… தவிக்க விடலாமா?

Share it if you like it

தடுக்க வேண்டியவர்களேதவிக்க விடலாமா?

திருப்பூர் மாநகராட்சியில், மண்டலம் எண் 1 என்ற இடத்தில் அமைந்து உள்ள, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் வேலம்பாளையத்தில், இஸ்லாமியர்கள் மசூதி கட்டி தொழுகை நடத்தி வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள “குடியிருப்போர் நலச்சங்கம்” சார்பில், 2014 ஆம் ஆண்டில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது.

சட்ட விரோதமாக கட்டப் பட்ட மசூதியை மூட வேண்டும் எனவும், அங்கு தொழுகை நடத்தக் கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தங்களது பணியினை மேற்கொண்ட போது, அங்கு உள்ள இஸ்லாமியர்கள், பெரும் எண்ணிக்கையில் குவிந்து, மசூதிக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளை அடைத்து, அப்பாவி பொது மக்களுக்கு இன்னல்கள் தரும் வகையில், இஸ்லாமியர்கள் பலர் ஒன்றுக்  கூடி, மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலவரக்காரர்களுக்கு ஆதரவு அளித்த ஆளுங்கட்சி எம்.எல்.. :

போராட்டம் செய்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் க. செல்வராஜ் அவர்கள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், “இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடம் பதற்றமான சூழ்நிலை உருவாகும்” என குறிப்பிட்டு உள்ளார்.

சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு, நீதிமன்றம் தலையிட்டு, நீதிமன்ற உத்தவரின் பேரிலேயே, மசூதி சீல் வைக்கப்பட இருந்தது. ஆனால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின்  எதிர்ப்பால், அது தடைப் பட்டது. மேலும், சட்டத்தை காக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினரே, வன்முறை செய்பவர்களுக்கு துணை போவது வருத்தமாக உள்ளது என, பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அனுமதி இன்றி கட்டப்பட்ட ஒரு மசூதியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர், இதுவரை எத்தனையோ கோயில்கள் இடிக்கப் பட்ட போது எங்கே இருந்தார்? சட்ட ரீதியாக எடுக்கப் படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

இது போல ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி, இஸ்லாமியர்கள் போராடுவது, இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும், பல்வேறு சம்பவங்கள், அது போல் நடந்தேறி உள்ளன.

ஹிஜாப்பை ஆதரித்து போராட்டம் :

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், கோயம்புத்தூரில் ஹிஜாபுக்கு ஆதரவாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் செய்தனர். கர்நாடகாவில் ஏற்பட்ட நிகழ்வை அடுத்து, தமிழகத்தில் போராடியது விந்தையாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.

https://www.indiatoday.in/india/story/tamil-nadu-hijab-protest-karnataka-government-uniform-policy-saffron-protest-1910964-2022-02-09

சி...க்கு எதிரான போராட்டம் :

2020 ஆம் ஆண்டில், சி.ஏ.ஏ. – என்.ஆர்.சி. – என்.பி.ஆர். (CAA – NRC – NPR) அமலாக்கம் செய்யப் படுவதை எதிர்த்து, தமிழகம் முழுவதும், பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் செய்தது. அதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/25/muslim-outfit-holds-anti-caa-protests-across-tamil-nadu-2094508.html

விஸ்வரூபம் படத்துக்கு எதிரான போராட்டம் :

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து, 2013 ஆம் ஆண்டு, “விஸ்வரூபம்” திரைப் படத்திற்கு எதிராக போராடினார்கள். அந்தப் படம் தங்களது மனதையும், மார்கத்தையும் புண்படுத்துவதாகக் கூறி, திரைப் படத்தைத் திரையிட விடாமல் போராடினார்கள். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு, படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கிய பிறகே, அந்தப் படத்தை வெளியிட, இஸ்லாமியர்கள் அனுமதி அளித்தனர். அதன் பிறகே, அப்படம் திரையரங்கில் வெளியிடப் பட்டது.

https://www.indiatoday.in/movies/story/kamal-haasan-vishwaroopam-banned-by-tamil-nadu-152383-2013-01-24

துப்பாக்கி படத்துக்கு எதிரான போராட்டம் :

2012 ஆம் ஆண்டில், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்திற்கு எதிராக, இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து போராட்டம் செய்தனர். அந்தப் படத்தில் இடம் பெறும் சில காட்சிகள், தங்களது மனதை புண்படுத்துவதாகக் கூறி போராடினர். பின்னர் பல்வேறு கட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, சில காட்சிகள் நீக்கப் பட்டு, வசனங்கள் மாற்றப் பட்டு, அந்தத் திரைப்படம் வெளியானது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கும்,  இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

https://www.newindianexpress.com/cities/chennai/2012/nov/15/thuppakki-triggers-ire-of-muslim-outfit-420872.html

கல் வீசப்பட்ட அமெரிக்க தூதரகம் :

அமெரிக்காவில், ஒரு படத்தில், இஸ்லாமியர்கள் வணங்கும் கடவுளை தவறாக காண்பிக்கப் பட்டதாகவும், அதனால் தங்களுடைய மனம் புண்படுத்துவதாகக் கூறி, சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை, கல் மற்றும் செரூப்பு வீசி, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சென்னையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://timesofindia.indiatimes.com/city/chennai/US-consulate-targeted-in-Chennai-over-anti-Prophet-Muhammad-film/articleshow/16397437.cms?referral=PM

“வன்முறை எதற்கும் தீர்வாகாது” என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எங்கோ ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்காக, இங்கிருந்து போராடுவது, எந்த வகையில் நியாயம்? “நாம் அனைவரும் இந்தியர்” என்ற எண்ணத்தோடு, நமது சக தேசத்தவர் பாதிக்கப் படுவார்கள் என்ற எண்ணத்தில், போராட்டத்தை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால், தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப் படுகிறார் என்ற ரீதியாகப் போராடுவது, எந்த வகையில் நியாயம்? இது போன்ற செயல்கள், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது போல உள்ளதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் வேலம் பாளையத்தில், பனியன் நிறுவனம் நடத்துவதற்காக, 1600 சதுர அடியில், மகாலட்சுமி நகரில், 2011 ஆம் ஆண்டு இடம் வாங்கப் பட்டது. பிறகு அந்த இடம், மசூதியாக மாற்றப் பட்டது. அதற்கு அங்கு உள்ள, “குடியிருப்போர் நலச்சங்கம்” எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற தலையீட்டின் பேரில், 2016 ஆம் ஆண்டே, மசூதியை மூட உத்தரவிட்டது.

https://timesofindia.indiatimes.com/city/coimbatore/protests-over-sealing-of-mosque-in-tirupur-bring-traffic-to-standstill/articleshow/92583785.cms

ஆனால் அதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டு, அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, நீதிமன்ற வழி காட்டுதலின் படி, மசூதியை மூட அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் உள்ள முக்கிய பகுதிகளில், இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கூட மாணவ – மாணவியர்கள், வீடு திரும்பும் மாலை நேரத்தில், இந்தப் போராட்டம் நடந்ததால், மாணவ – மாணவியர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

பள்ளிக்கூடத்தில் இருந்து தங்களது குழந்தைகளை அழைத்து வர சென்ற பெற்றோர்களும், சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகினர். தங்களுடைய சக தேசத்தவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற எண்ணம் துளிக் கூட இல்லாமல், மதத்திற்காக சாலை மறியல் செய்வது எந்த வகையில் நியாயம்? என பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு, இதுவரை யாரும் எந்த பதிலும் கூறவில்லை?!

மதச்சார்பற்ற நமது இந்திய நாட்டில், எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மசூதிக்காக குரல் எழுப்பி முதல்வருக்கு கடிதம் எழுதுகின்றார். நீதிமன்றத் தீர்ப்பையே ஓருவர் மாற்ற நினைப்பது, எந்த வகையில் நியாயம்? என அந்தத் தொகுதி மக்கள் கேட்ட கேள்விக்கு, இதுவரை அந்த சட்டமன்ற உறுப்பினர், எந்த பதிலும் கூறவில்லை. எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டிய சட்டம், யாருக்கும் எந்த ஒரு காரணத்திற்காகவும், வளைந்துக் கொடுக்க கூடாது என்பதே, பொது மக்களின் எண்ணமாக இருக்கின்றது.

மதத்தைக் கடந்து, மனிதனாக ஒன்று சேர்வோம்…

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it