இஸ்லாமிய பெண்களுக்கு தேர்தலில் சீட் வழங்குவது: இஸ்லாத்தை பலவீனப்படுத்தும் முயற்சி – ஷாஹி இமாம் காட்டம்!

இஸ்லாமிய பெண்களுக்கு தேர்தலில் சீட் வழங்குவது: இஸ்லாத்தை பலவீனப்படுத்தும் முயற்சி – ஷாஹி இமாம் காட்டம்!

Share it if you like it

இஸ்லாமிய பெண்களுக்கு தேர்தலில் சீட் வழங்குவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தும் முயற்சி என குஜராத் மதகுரு ஏஎன்ஐ நிருபரிடம் பேசிய காணொளி வைரலாகி வருகிறது.

நிருபரிடம் மதகுரு கூறிய விவரம் இதோ :

இஸ்லாம் குறித்து நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்கள் நாங்கள் நமாஸ் படிக்கிறோம். ஒரு பெண்ணையாவது காண முடிகிறதா? இஸ்லாத்தில் நமாஸ் படிப்பது மிக முக்கியமானது? பெண்கள் இதுபோல பொது வெளியில் வருவது இஸ்லாத்தில் நியாயப்படுத்தப்பட்டால், அவர்கள் மசூதிக்கு வருவதை தடுத்து இருக்க மாட்டோம். எதற்காக மசூதியில் அனுமதிக்கப்படவில்லை, அதுதான் இஸ்லாம் மதத்தின் நடைமுறை.

இதனால் யார் பெண்களுக்கு சீட் வழங்குகிறார்களோ அவர்கள் இஸ்லாத்தை பலவீனப்படுத்துகிறார்கள் என்பது அர்த்தம். இது இஸ்லாத்துக்கு எதிரானது. உங்களிடம் ஆண்கள் இல்லையா? பெண்களை ஏன்? அழைக்கிறீர்கள். இது எங்களை பலவீனப்படுத்துகிறது. பலவீனம் ஏன்? ஏற்படுகிறது என்றால், சில காலம் முன் கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை நடந்தது. பெரிய அளவில் பிரச்சனை நடந்தது அல்லவா? பெண்களை நீங்க எம்.எல்.ஏ. கவுன்சிலர் என உருவாக்கினால் எங்களால் ஹிஜாபை பாதுகாக்க முடியாது.

ஹிஜாப் பிரச்சனையை நாங்கள் பெரிதாக்கவில்லை. ஏனென்றால் இது குறித்து அரசிடம் கூறினால், அரசு கூறுகிறது, உங்கள் பெண்கள் இன்று சட்டசபைக்கு வருகிறார்கள், பாராளுமன்றத்திற்கு வருகிறார்கள் நகராட்சி மன்றத்தில் சென்று அமர்கிறார்கள். மக்கள் வழக்கு போடுகிறார்கள். தேர்தலில் நிற்கவேண்டும் என்றால் வீடு வீடாக செல்ல வேண்டும். இந்துவோ, முஸ்லிமோ, யாராக இருந்தாலும்? இஸ்லாத்தில் பெண்களின் குரலே பெண்கள்தான். அதனால் தான் நான் இதை முழுவதும் எதிர்க்கிறேன். உங்களுக்கு போட்டியிட வேண்டுமா? நீங்கள் ஆண் தானே, ஆண்களுக்கு சீட் வழங்குங்களேன். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it