இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி!

Share it if you like it

ஹிஜாப் விவகாரத்தில் சம்மந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு. ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டது. அப்போதே உள்ளாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்தது. பின்னர், டெல்லி கலவரத்தின்போதும் மூக்கை நுழைத்து இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இதற்கும் இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது ஹிஜாப் விவகாரத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து மூக்குடைபட்டிருக்கிறது.

ஹிஜாப் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கும் நிலையில், இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, முஸ்லிம் சமுதாயத்தினரின் பாதுகாப்பையும், அவர்கள் பாதுகாப்பான நல்வாழ்க்கை வாழ்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முஸ்லீம்கள் மீதான வன்முறை மற்றும் வெறுப்புக் குற்றங்களை தூண்டுபவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்குத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியலமைப்பு மற்றும் வழிமுறைகள், ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எந்தவொரு விவகாரமும் அணுகப்பட்டு தீர்வுகாணப்படுகிறது. இந்த உண்மைகளை இந்தியாவை நன்கு உணர்ந்தவர்கள் அறிவார்கள், ஆனால், இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் வகுப்புவாத மனநிலை இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரத்தையும் முன்னெடுக்க வைக்கிறது. இது அந்த அமைப்பின் நற்பெயருக்குத்தான் களங்கம் விளைவிக்கும். தவிர, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it