இஸ்ரேல் – பாரதம் இரண்டும் நீண்ட காலமாக மத ரீதியான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகள். இரண்டு நாடுகளிலும் தன்னுடைய மதம் பண்பாடு கலாச்சாரம் அது சார்ந்த வாழ்வியலில் கட்டிக் காக்கும் அதன் வழியில் தன் மக்களை நிலை நிறுத்தவும் நீண்ட போராட்டங்களை கடந்து வந்தவை. தனது தேசத்தின் பாதுகாப்பு தேசிய இறையாண்மையை காக்க பல பொருள் சேதங்களையும் உயிர் சேதங்களையும் கடந்து வந்த தேசங்கள். பயங்கரவாதத்தின் கோரத்தாண்டவத்தை கண்ணீரும் உதிரமும் சிந்தியபடி கடந்து வந்ததாலோ என்னவோ? இரு நாடுகளும் ஒரு நாட்டின் வலியை இன்னொரு நாடு இயல்பாய் உணரும் பக்குவம் இருந்தது . அந்த வலியின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இயல்பில் ஒரு நாட்டின் பேரில் இன்னொரு நாட்டிற்கு இயல்பான பரிவும் அக்கறையும் இருந்தது. நாளடைவில் அது நல்லெண்ணமாக நட்புறவாக வளர்ந்து நிற்கிறது.
நூறாண்டுகளாக தொடரும் போராட்ட வரலாற்றில் தனது நெருக்கடியான காலகட்டத்தில் தன் தேசத்தின் மக்களுக்கு அபயக்கரம் நீட்டி அரவணைத்த தாய் தேசம் என்ற நன்றி உணர்வு எப்போதும் இஸ்ரேலுக்கு பாரதத்தின் மீது உண்டு. பிரிட்டிஷார் காலத்தில் இஸ்ரேலிய உள்நாட்டு சிக்கலில் வெற்றிகரமாக போராடி தீர்வைத் தேடிக் கொடுத்தது இந்திய வீரர்களின் பங்களிப்பும் தியாகமும் இருப்பதை இன்றளவும் அவர்கள் நன்றியோடு நினைவு கூறுகிறார்கள் . அந்த வகையில் இஸ்ரேலிய மண்ணும் மக்களும் எப்போதும் பாரதத்தின் மீது மாறாத அன்பும் பற்றும் கொண்டிருக்கும்.
இந்தியர்களுக்கு இஸ்ரேலியர்கள் பொதுவான பார்வையில் தம்மை போல் மனிதர்கள். அதையும் கடந்து தங்களின் வலியை உணர்ந்தவர்கள். நெருக்கடி காலத்தில் எல்லாம் தங்களைப் போலவே துன்பங்கள் இழப்புகளை கடந்து வந்தவர்கள் என்ற இயல்பிலான ஒரு புரிதல் பாசம் இருந்தது. எத்தனையோ நாடுகளுக்கு பாரதம் எவ்வளவோ உதவிகளை செய்து இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் கொடுக்கும் கையை எடுப்பதற்கு முன்பாகவே அந்த கையையே வெட்டி எறியும் நயவஞ்சகத்தை தான் பாரதத்திற்கு பிரதி உபகாரமாக செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாக தனது நெருக்கடி காலத்தில் பாரதம் செய்த சிறிய உதவிகளை கூட பெரிய அளவில் மனதில் வைத்து பெரும் அன்பும் நட்பும் பாராட்டும் இஸ்ரேலின் பண்பும் நல்லெண்ணமும் பாரதியர்களுக்கு இஸ்ரேலியர்களின் பெயரில் ஆழ்ந்த அன்பையும் இணக்கமான உணர்வையும் ஏற்படுத்தியது.
மண்ணும் மக்களும் உணர்வதை தான் ஆட்சியாளர்கள் பிரதிபலிப்பார்கள். ஆட்சியாளர்களின் எண்ண ஓட்டத்தின் வழியில் தான் மக்கள் பயணிப்பார்கள். இந்த ஒருங்கிணைப்பு புரிந்துணர்வும் இருக்கும் நாடுகள் தான் வெற்றிகரமான பாதையில் பயணிக்க முடியும் . அவ்வகையில் இஸ்ரேலின் மண்ணும் மக்களும் ஆட்சியாளர்களும் ஒருமித்த கருத்தோடு பாரதத்தோடு நட்பும் நல்லெண்ணமும் மரியாதையும் கொண்டிருப்பவர்கள். அதே வழியில் இஸ்ரேலிய மக்கள் ஆட்சியாளர்கள் மீது பாரதத்தின் மக்கள் ஆட்சியாளர்கள் அன்பையும் மரியாதையையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்த தயங்கியதே இல்லை. பாரதத்தில் சில காலம் இஸ்ரேலியன் உறவு பின் தங்கி இருந்தாலும் அவை அனைத்தும் கட்சி அரசியல் மட்டத்தில் இருந்ததே தோன்றிய மக்களின் மன ஓட்டத்தில் இருந்தது இல்லை. இந்த குளறுபடிகளும் சரியான நிலையில் இந்திய இஸ்ரேல் உறவு உலக அளவில் பிரிக்க முடியாத இரட்டை பிறவி பந்தங்களாக மாறி நிற்கிறது.
சுதந்திர பாரதத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது நெருக்கடி காலத்தில் எல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் சூழும் போதெல்லாம் தனக்கு தாமாக முன்வந்து ஆதரவை வழங்கிய சகோதர நாடு இஸ்ரேல் என்ற அளவில் பாரதம் எப்போதும் இஸ்ரேல் கருத்துக்கும் நிலைப்பாட்டிற்கும் உரிய கௌரவத்தை வழங்கும் . பாகிஸ்தான் காஷ்மீர் இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் பல்வேறு உலக நாடுகள் பாரதத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் போதெல்லாம் பாரதத்தின் பக்கம் வெளிப்படையான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்தது இஸ்ரேல் மட்டுமே. அந்த நல்லெண்ணமும் புரிதலும் இன்றைக்கும் பாரதத்தின் வெளியுறவு துறை நட்புறவோடு கட்டிக் காத்து வருகிறது.
கடந்த காலங்களில் உள்நாட்டிலும் எல்லைப்புறத்திலும் பாரதத்தை நெருக்கடி சூழும் போதெல்லாம் சீனா பாகிஸ்தான் என்ற பகை நாடுகள் பாரதத்தை ஆக்கிரமிக்கும் போதெல்லாம் வெளிப்படையாக பாரதத்தை ஆதரித்த முதல் நாடு இஸ்ரேல். அவ்வகையில் இன்று இஸ்ரேல் காசாவில் தான் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதன் காரணமாக உக்கிரமான யுத்தத்தில் இருக்கும் போதும் பகிரங்கமாக முதல் நபராக தனது முழு ஆதரவை இஸ்ரேலுக்கு அறிவித்து தனது நட்புணர்வை நல்லெண்ணத்தை நிரூபித்தது பாரதம்.
இதோ இஸ்ரேலின் பிரதமர் யுத்த களத்தில் தனது மகனை போருக்கு அனுப்ப தயாராகிறார். இஸ்ரேல் நாட்டின் சட்டப்படி நாட்டில் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி உண்டு. நெருக்கடி காலத்தில் அனைவரும் அழைக்கப்படுவார்கள். எப்போதும் ரிசர்வ்டு யூனிட் என்று ஒரு சிறப்பு ராணுவம் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கும். தேவைப்பட்டால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ராணுவ வீரனாக அவதானிப்பான். அந்த வகையில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சிறிய தேசம் என்றாலும் வலுவான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் என்ற வகையில் எனது தேசத்தின் பாதுகாப்பு இறையாண்மை காக்க ஒவ்வொருவரும் போர் கோலம் பூண எப்போதும் தயாராக இருப்பார்கள்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன் யாஹூ அடிப்படையில் ராணுவ பின்புலம் கொண்டவர். இதோ அவசர நிலையை பிரகடனம் செய்து அவர் தனது ராணுவ வழியில் தேசத்தை பாதுகாக்க தொடங்கிவிட்டார். இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பாளர் எதிர்க்கட்சி தலைவராக தனது தேசம் நெருக்கடியில் இருக்கும் போது அவரின் பிரதமருக்கு உற்ற சகோதரனாக தோழனாக தோள் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பங்களிப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கு அவர் இஸ்ரேல் பிரதமருடன் கைகோர்த்து நிற்கிறார். காரணம் இஸ்ரேலிய பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் கட்சி அரசியல் ரீதியாக எதிர் அணியில் இருக்கலாம். ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் அவர்கள் இஸ்ரேலிய குடிமக்கள். இஸ்ரேலிய நாட்டின் முன்னாள் இந்நாள் பிரதமர்கள். அவ்வகையில் அவர்களுக்கு அவர்களின் தன்னலன் அரசியல் ஆதாயம் கடந்து தேசத்தின் நலனும் பாதுகாப்பும் பிரதானம். அந்த வகையில் அவர்கள் அவர்களின் தேசியத்தை நிரூபிக்கும் தருணம் வாய்க்கும்போது அதை சரியாக செய்கிறார்கள்.
பாரதத்தில் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி அவரது அமைச்சரவை சகாக்கள் பாதுகாப்பு அமைப்புகள் எல்லாமே கண்கொத்தி பாம்புகளாக தேசத்தின் உள்ளம் புறமும் காவல் காக்கிறார்கள். ஒரு பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் உலகத்தின் ஒட்டுமொத்த கவனமும் அங்கே இருக்கும் போது அசந்த நேரம் பார்த்து எந்த ஒரு நாடும் தன் தேசத்தில் ஊடுருவ முயலக்கூடாது. தேசத்தின் உள்ளே எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழ தரக்கூடாது. அதிலும் நவராத்திரி தீபாவளி என்று பண்டிகைகள் வரிசை கட்டும் காலத்தில் மக்கள் அச்சுறுத்தி பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் விவகாரங்களுக்கு இடம் தரக் கூடாது என்று உச்சகட்ட விழிப்போடு பாதுகாப்பு முகமைகள் எல்லாம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இமயத்தின் உச்சியில் 6, 200 ஆயிரம் அடிக்கும் மேலான இடத்திற்கு நடந்து போய் இந்த பூமியின் பாரம்பரியமான ஆன்மீக வழியில் பூஜை புனஸ்காரங்களை மேற்கொண்டு எதிர்வரும் நவராத்திரியை ஆன்மீக வழியில் வரவேற்று இருக்கிறார் பாரதத்தின் பிரதமர் . எல்லையில் ராணுவ வீரர்களோடு அதிக நேரத்தை செலவழித்து அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் .இதன் மூலம் நானும் எனது ராணுவமும் எனது தேசமும் இறைவனின் துணையோடு விழிப்போடு இருக்கிறோம். எங்களின் தேசத்தின் உள்ளம் புறமும் கண்காணிக்கிறோம் என்பதை உறுதியுடன் சொல்லி இருக்கிறார்.
பாரதத்தின் வெளியுறவு துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவரும் இஸ்ரேலின் யுத்தத்திற்கு பாரதம் முழு ஆதரவு என்றாலும் யுத்த களத்தில் இருக்கும் பாரதியர்களை பத்திரமாக நாட்டிற்கு மீட்டுக் கொண்டு வருவதிலும் சமரசம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். பாரதத்தின் விமானப்படையின் மூலம் ஆஃபரேஷன் விஜய் என்ற பெயரில் இஸ்ரேலில் இருக்கும் 18,000 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணியை நேற்று முதல் தொடங்கிவிட்டார். நேற்று இரவு முதல் கட்டமாக 230 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பி இருக்கிறார்கள். இனி அடுத்தடுத்த கட்டமாக எஞ்சியிருக்கும் இந்தியர்களும் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக நாடு திரும்ப முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
பாரதத்திலும் எதிர்க்கட்சிகள் உண்டு. அவர்களிலும் பல தலைவர்கள் உண்டு. தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுதந்திர பாரதத்தை ஆண்ட கட்சியின் இளவரசர் என்று சொல்லிக் கொள்பவர் தேசத்தை பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவருக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்து தாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் உள்ளூர் அமைப்புகள் கட்சிகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கி இருக்கிறார். இதே காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் பாரதத்தின் மீது காஷ்மீரை மையமாக வைத்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்த போது அவர்களை எல்லாம் முழுமையாக ஆதரித்தது பாலஸ்தீனம். ஆனால் அந்த பயங்கரவாதிகளை எதிர்த்து பாரதத்தின் பக்கம் துணை நின்றது இஸ்ரேல் . ஆனால் இன்று இஸ்ரேல் பெறும் நெருக்கடிகள் இருக்கும் போது பாரதத்தின் ஆட்சியாளர்கள் நியாயமாக இஸ்ரேலின் பக்கம் நிற்கிறார்கள். ஆனால் பாரதத்தின் எதிர்க்கட்சி முன்னாள் ஆண்ட கட்சி என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசும் அதன் கட்சியின் இளவரசரும் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம் என்று வெளிப்படையாக வெட்கமில்லாமல் சொல்லிவிட்டார்கள்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம் வெளிப்படுகிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று எந்த நிலையில் இருந்தாலும் காங்கிரஸின் எண்ணம் மட்டும் எப்போதும் இந்திய நலனுக்கு எதிராகவே இருக்கும். அது இந்தியர்களின் மன ஓட்டம் அவர்களின் நலன் விரும்பிகளுக்கு எதிராகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்திருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் என்றால் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு . இந்தியா சீனா என்றால் சீன ஆதரவு நிலைப்பாடு என்று கடந்த காலங்களில் தனது ஆட்சி காலத்தில் தனது விசுவாசத்தை நிரூபித்தவர்கள் . இன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது இந்த தேசத்திற்கு யார் நலன் விரும்பிகளாக இருப்பார்களோ? அவர்கள் எங்களுக்கு எதிரிகள் இந்த தேசத்திற்கு யார் எதிரிகளாக கொடூரங்களை நிகழ்த்துவார்களோ? அவர்கள் எங்கள் நண்பர்கள். என்ற வகையில் காங்கிரஸ் தனது கோர முகத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாரதத்தின் பிரதமர் உலகை சூழும் நெருக்கடியில் தனது தேசத்தை பாதுகாத்து விடக்கூடாது என்று விழிப்போடு இருக்கிறார். தனது நட்பு நாட்டிற்கு தான் கொடுக்கும் ஆதரவு தனது தேசத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்று காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் தேசத்தின் அரை நூற்றாண்டு காலம் ஆண்ட கட்சிகள் பரம்பரை வாரிசுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு தலைமை குடும்பமும் கட்சியும் அப்பட்டமாக தேசத்திற்கு எதிரான கருத்துக்களை உள்நாட்டில் வெளிநாட்டிலும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளது. விமானப்படையின் விமானியாக இருந்து கொண்டு அடிப்படை விதிகளை மீறி உள்நாட்டில் போர் மூண்ட இருக்கிறது என்ற நிலையில் அவசர விடுப்பு எடுத்துக்கொண்டு மனைவி மக்களோடு வெளிநாட்டுக்கு பறந்து போன வம்சாவழியில் வந்தவர்கள் நாங்கள் என்பதை காங்கிரசின் இளவரசர் இஸ்ரேல் பாலஸ்தீன நெருக்கடியில் தனது பாலஸ்தீன ஆதரவு மூலம் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். அவ்வகையில் தலைமுறைகள் மாறலாம். காங்கிரசின் தேச விரோகம் மாறாது. கட்சி தலைமைகள் மாறலாம். ஆனால் மக்கள் விரோத தேச விரோத சிந்தனை மட்டும் மாறாது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.