இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் யுத்தம் – பற்றி எரியும் காஸா நகரம்

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் யுத்தம் – பற்றி எரியும் காஸா நகரம்

Share it if you like it

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக யுத்தம் பகைமை நீடிக்கிறது. ஜெருசலேம் நகரை மையப்படுத்தி நிகழும் இந்த பகைமையில் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ராணுவம் தொடுத்த யுத்தங்களை விட பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத இயக்கங்கள் தொடுத்த யுத்தமும் தாக்குதல்களுமே அதிகம். பாலஸ்தீன பகுதியை தளமாக கொண்டு செயல்படும் பல்வேறு உள்ளூர் குழுக்கள் சிறு அளவிலான தாக்குதல்கள் சேதங்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்துவது வாடிக்கை என்றாலும் அவை பெரும்பாலும் இஸ்ரேலிய உளவுத்துறையாலும் ராணுவத்தாலும் தவிடு பொடியாக்கப்படும். ஆனால் உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் – அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு நிகராக அடுத்த வரிசையில் வலுப் பெற்று வரும் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் பாலஸ்தீனத்தைக் கடந்து ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளிப்படையாக இயங்கக் கூடியது.

ஹமாஸ் இயக்கம் என்றாலே அது இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத இயக்கம். இஸ்ரேலின் ராணுவம் உளவு பொதுமக்கள் என்று அனைத்திற்கும் சேதம் விளைவிப்பதையே கொள்கையாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு என்பது அரபு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் உண்மை. இந்த ஹமாஸ் இயக்கத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு அரபு நாடுகள் ஏராளமான நிதி உதவியும் அரசியல் லாபியும் செய்து வருகிறது . இவர்கள் அனைவரின் ஒருமித்த ஆதரவோடு ஹமாஸ் இயக்கம் அவ்வப்போது இஸ்ரேலுடன் யுத்தத்தில் இறங்கும். வழக்கமாக ஹமாஸ் தனது கைவரிசையை காட்டப் போகும். பதிலுக்கு இஸ்ரேல் மீள முடியாத இழப்பை ஹமாஸிற்கு கொடுக்கும் . அது பாலஸ்தீனத்திலும் பல மட்டத்திலும் பேரிழப்பாக எதிரொலிக்கும். உடனே அரபு நாடுகளும் இஸ்ரேலுக்கும் நெருக்கமான நாடுகளும் யுத்தம் அதன் காரணமான பேரழிவுகள் இஸ்ரேலிய மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எடுத்துக் கூறி இஸ்ரேலை அமைதியாக்கி யுத்தத்தை முடித்து வைக்கும்.

இஸ்ரேல் எப்போதும் தனது நாட்டு மக்களின் பாதுகாப்பு தேசிய இறையாண்மையில் விட்டுக் கொடுப்பதே இல்லை. பொதுவாக தனது தேசத்தில் ஒரு உயிரிழப்பு எனில் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு அதைப் போல பல மடங்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடேஅது களமிறங்கும் . அதனால் எப்போதும் இஸ்ரேல் காணும் இழப்பை விட பல மடங்கு இழப்புகளை இஸ்ரலை எதிர்த்து களம் இறங்கும் ஹமாஸ் அதன் பின் இருக்கும் பாலஸ்தீனம் உள்ளிட்ட ஆதரவு நாடுகள் இயக்கங்கள் எதிர்கொள்ளும். இந்த மோதல் வரலாறு பல ஆண்டுகளாக வாடிக்கையாக தொடர்ந்து வருகிறது.ஆற்று மணலைக் கூட எண்ணிவிட முடியும். ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடந்த சிறு யுத்தங்களை கணக்கிட முடியாது. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகால நீண்ட நெடிய யுத்த வரலாறு கொண்டது இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்கள். தற்போது மீண்டும் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடங்கி இருக்கும் மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இருதரப்பிலும் கணிசமான உயிரிழப்புகளும் பெரும் சேதங்களோடே இந்த யுத்தம் தொடங்கியிருக்கிறது. ஆனால் இந்த யுத்தம் உடனடியாக முடிவுக்கு வரக்கூடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இஸ்ரேலின் முப்படைகளும் களமிறங்கிய நிலையில் காஸாவில் இருக்கும் பொதுமக்கள் உயிரை காத்துக் கொள்ள வெளியேறி விடுங்கள் என்ற எச்சரிக்கையை கொடுத்துவிட்டு இஸ்ரேல் போர் தொடுத்தது. அந்த எச்சரிக்கை போய் சேரும் முன்னே இஸ்ரேலிய விமானங்களின் குண்டு வீச்சும் ஏவுகணைகளும் காசாவை துளைக்கத் தொடங்கியது . காஸா நகரில் ஒரு வர்த்தக தளத்தில் மையமாக இருந்துதான் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் தொடுத்ததாக கிடைத்த தகவலின் பெயரில் அந்த வர்த்தக மையத்தை குண்டு வீசி அடியோடு தகர்த்து இருக்கிறது இஸ்ரேல். மேலும் காஸாவின் நகருக்கான மின்சாரம் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை விநியோகத்தை தடுத்து வைத்திருக்கிறது. அங்கிருக்கும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் இஸ்ரேலிய மக்கள் இராணுவம் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு அவர்களின் மீட்புக்கு தேவையான ராஜ்ய நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது. மறுபுறம் திரும்பிய பக்கம் எல்லாம் இஸ்ரேலின் குண்டு வீச்சுகள் அதன் மூலம் தரைமட்டம் ஆகிவரும் காஸாவின் கட்டிடங்கள் ரத்தமும் சதையுமாக பயங்கரவாதிகள் அவர்களின் ஆதரவாளர்களின் மரண ஓலங்கள் என்று காஸா நகரமே மயான பூமியாக மாறி இருக்கிறது.

இந்த இஸ்ரேல் காஸா இடையிலான போர் பதற்றம். காரணமாக உள்நாட்டை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு பிரதமர் நெதன் யாகூ ராணுவ தலைமையகத்தை ஒருங்கிணைத்து கட்டளையிடும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அடிப்படையில் அவர் ராணுவ பின்புலம் கொண்டவர் . கடந்த காலங்களில் ராணுவ தளபதியாக பணியாற்றியவர் என்பதால் இந்த அவசர நிலையும் ராணுவ ஒருங்கிணைப்பும் அவருக்கு புதிதல்ல. அதே நேரத்தில் சமூகமாக எல்லாம் போய்க் கொண்டிருந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தினர் வலிய போய் தொடுத்த தாக்குதல்கள் அதன் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சர்வதேச அளவிலான அவமதிப்பு என்று பெரும் வன்மத்தோடு இஸ்ரேல் களமிறங்குகிறது. இது வெறும் தற்காப்பு யுத்தமாகவோ அல்லது தடுத்தாளும் யுத்தமாகவோ இருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு முடிவை மனதில் வைத்து தீர்க்கமாக களமிறங்குவதற்கான அத்தனை சமிக்ஞையும் இஸ்ரேலின் நடவடிக்கைகளில் தெரிகிறது. அந்த வகையில் இது இஸ்ரேலின் மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் இயக்கத்திற்கான யுத்தமாக மட்டுமே முடியுமா? அல்லது ஹமாஸின் பின்னிருக்கும் இதர இயக்கங்கள் அவர்கள் சார்ந்த நாடுகள் என்று பெரும் யுத்தமாக வெடிக்க கூடுமா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

பொதுவாக தனது தேசத்தின் பாதுகாப்பு என்று வரும்போது இஸ்ரேல் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. கடந்த காலங்களில் அதற்காக பெரும் இழப்புக்கள் இடர்பாடுகளை இஸ்ரேல் கடந்து வந்தாலும் அவை அத்தனையும் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் செய்ய தவறியதுமில்லை. உலகின் மிக வலுவான உளவு அமைப்பாக கருதப்படும் மொஸாட் உள்நாட்டு குடிமக்களில் ஆண் பெண் என்று அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி. தேசத்திற்கு ஏதேனும் ஒரு நெருக்கடி அசாதாரண சூழல் என்றால் ஒவ்வொரு குடிமகனும் ராணுவ வீரனாக தேசம் காக்க களமிறங்கும் தேசிய சிந்தனை என்று இஸ்ரேல் நாடு பாதுகாப்பிலும் தேசிய இறையாண்மையிலும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் முன்னோடியாக விளங்குகிறது. ஆனால் அவ்வளவு சிறப்புகளை கொண்ட ஒரு தேசம் பெரும் இழப்பையும் தாக்குதலையும் எதிர்கொண்டு அதன் மூலம் பொருளாதார ஏற்பாடுகள் உள்நாட்டு அவசர நிலை என்று நெருக்கடியில் சிக்கி இருப்பதை உலக நாடுகள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.


Share it if you like it