நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை – அண்ணாமலை !

நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை – அண்ணாமலை !

Share it if you like it

சமீபத்தில் திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டு கோவை மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

சமூக விரோதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நியூஸ் 7 தமிழ் ஊடகவியலாளர், சகோதரர் திரு. நேசபிரபு அவர்களை, இன்று மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினோம்.

சகோதரர் நேசபிரபு அவர்களின் குடும்பத்தாரிடமும் தைரியம் கூறி, பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தோம்.

நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை.


Share it if you like it