சட்ட விரோத மசூதி ஆந்திர காவல்துறை மீது PFI கட்சியினர் கொலை வெறி தாக்குதல்.
ஓட்டு அரசியலுக்காக, சிறுபான்மை மக்களை, தி.மு.க எப்படி? தாஜா செய்து வருகிறதோ. அதே போன்ற பாணியை தான் ஆந்திராவில் ஆட்சி புரியும் ஜெகன் மோகன் ரெட்டியும் மேற்கொண்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, 100.க்கும் அதிகமான கோவில்கள் இடிப்பு. ஹிந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும், சம்பவங்களுக்கு இணையாக தற்பொழுது ஜெகன் மோகன் ரெட்டியின் கொடுங்கோல் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில் தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஆத்மகூரில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்படுகிறது, என்று பா.ஜ.க மாவட்ட தலைவர் புத்தா ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையில் புகார் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிராக PFI கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை வெறி தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டு அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்கு பதிலாக கலவரக்காரர்களை ஆந்திர அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று பலர் ஜெகன் அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.