ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சந்தனம், குங்குமம் வைக்க ஹிந்து விரோத தி.மு.க. அரசு தடை!

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சந்தனம், குங்குமம் வைக்க ஹிந்து விரோத தி.மு.க. அரசு தடை!

Share it if you like it

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தும், மாலை அணிவித்தும் அலங்காரம் செய்யக் கூடாது என்று, ஹிந்து விரோத தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவிட்டிருப்பதால், ஜல்லக்கட்டு ஆர்வலர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும், அலங்காரத்துடன் காளைகளை அனுமதிக்கக் கோரி, காளைகளை போல கழுத்தில் மணி, மாலை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனுக் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜல்லிக்கட்டு என்பது தென் மாவட்டங்களில்தான் மிகவும் பிரபலமானது. இதிலும் குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வீர விளையாட்டாக கருதுவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினரைப் போல வளர்ப்பார்கள். ஆகவே, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளன்று தங்களது காளைகளை குளிப்பாட்டி, கழுத்தில் மணி கட்டி, மாலை அணிவித்து, நெற்றியில் மஞ்சள், குங்குமம் பூசி அலங்காரம் செய்து வாடிவாசலுக்கு கெத்தாக அழைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க, நிகழாண்டு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு மாலை அணிவிக்கக் கூடாது, மஞ்சள், குங்குமம் பூசக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறதாம் ஹிந்து விரோத தி.மு.க. அரசு. இந்த விஷயத்தை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் உரிமையாளர்களிடம் கறாராகக் கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதுதான், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை கடும் அதிருப்தியும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, காளைகளுக்கு அலங்காரம் செய்ய அனுமதிக்கக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்ட காளைகளின் உரிமையாளர்கள், காளைகளைப் போல கழுத்தில் மணி, மாலை ஆகியவற்றை அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக கலெக்டர் அனிஷ்சேகரிடம் மனுவும் கொடுத்தனர். ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் சார்பில் கலெக்டர் அனிஷ்சேகரிடம் கொடுக்கப்பட்ட அந்த மனுவில், “தமிழகத்தின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. காளைகளை கோயில்களிலும், வீட்டிலும் முறையாக தெய்வ வழிபாடு செய்து மாலை மரியாதை செய்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், திருநீரு பூசி தெய்வம் போல் அலங்கரித்து வாடிவாசலுக்கு கொண்டு வருகிறோம்.

அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் காளைகளை போருக்கு சென்று திரும்பும் வீரனை போல ஆரத்தி எடுத்து மரியாதை செய்வோம். காளை அலங்காரத்தோடு இருப்பது எங்கள் தெய்வம் இருப்பது போன்றது. ஆனால், தற்போது நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசலுக்கு வரும் அதிகாரிகள், காளைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மணி, கழுத்து துண்டு, கொம்பின் அடையாளம் மற்றும் சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி உட்பட அனைத்து அடையாளங்களையும் அழித்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிப்போம் என்று கூறுகின்றனர். காளைகளின் அலங்காரங்களை அழிப்பது தவறானதாகும். எனவே, நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளின் அடையாளங்களை அழிக்க கூடாது. இதனை கலெக்டர் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஹிந்துக்களின் வழிபாடு, கலாசாரம், பாரம்பரியம் இவற்றை அழிப்பதிலேயே குறியாக இருக்கும் ஹிந்து விரோத தி.மு.க. அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ என்று விரக்தியுடன் நொந்து கொள்கிறார்கள் ஹிந்துக்கள்.


Share it if you like it