மத்தவங்க சொல்றதை நம்பாதீங்க… ஜம்முவில் விரைவில் தேர்தல்! அமித்ஷா உறுதி..!

மத்தவங்க சொல்றதை நம்பாதீங்க… ஜம்முவில் விரைவில் தேர்தல்! அமித்ஷா உறுதி..!

Share it if you like it

ஜம்மு – காஷ்மீர் பற்றி பலரும் பலவிதமாக பேசிவருகிறார்கள். ஆனால், தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்ததும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதேபோல, சூழல் சரியானதும் மாநில அந்தஸ்தும் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியாகக் கூறியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. பிறகு, அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன. இதனால், ஜம்மு – காஷ்மீரில் வன்முறை வெடித்தது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு – காஷ்மீரில் சிறந்த மாவட்ட நல்லாட்சி குறியீட்டை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, சிறந்த மாவட்ட நல்லாட்சி குறியீடு அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதன்கீழ் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மாவட்ட அளவில் கண்காணிக்கப்பட்டு, சிறந்த மாவட்டங்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். அதேபோல, ஜம்மு – காஷ்மீர் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். ஆனால், நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன், ஜம்மு – காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிந்ததும் சட்டமன்றத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும். அதேபோல, ஜம்மு – காஷ்மீரில் நிலவும் கடுமையான சூழல் சரியானதும் மாநில அந்தஸ்தும் திரும்ப வழங்கப்படும் என்று கூறினார். இது ஜம்மு – காஷ்மீர் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it