ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக, 4 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதனால் சுற்றுலா வருவாய் முற்றிலுமாக தடைபட்டது. இதையடுத்து, பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு களமிறங்கியது. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீஸாரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீஸாரும் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சுரன்கொட் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


Share it if you like it