தொலைக்காட்சி நேர்காணலில் பாதியில் தலைதெறிக்க ஓடிய ஃபரூக் அப்துல்லா!

தொலைக்காட்சி நேர்காணலில் பாதியில் தலைதெறிக்க ஓடிய ஃபரூக் அப்துல்லா!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவிடம், சிறப்பு நேர்காணல் நடத்திய தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று, காஷ்மீரி பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பவே, அவர் நேர்காணலில் இருந்து பாதியிலேயே தலைதெறிக்க ஓடிய சம்பவம் கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை முதல்வராக இருந்தவர் ஃபரூக் அப்துல்லா. இவரது ஆட்சி காலத்தில்தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி, நாச வேலைகளில் ஈடுபட்டனர். இந்த பயங்கரவாதிகளில் 70 பேரை 1989-ம் ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் கைது செய்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் ஃப்ரூக் அப்துல்லா விடுவித்து விட்டார். இவர்கள்தான், ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை 1990 ஜனவரி மாதம் இறுதியில் இனப்படுகொலை செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்த ஃபரூக் அப்துல்லா, தன் மீது பழிச்சொல் வந்து விடக்கூடாது என்பதற்காக, சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் பதவியிலிருந்து விலகி விட்டார். ஆனால், காஷ்மீரில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

இந்த சூழலில்தான், கடந்த மார்ச் மாதம் விவேக் அக்னி ஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளியாகி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டியது. இதன் பிறகு, ஃபரூக் அப்துல்லாவை எங்கு பார்த்தாலும் காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை பற்றி கேட்பதை செய்தியாளர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருக்கும் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள டெல்லிக்கு வந்தபோது, அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு, காஷ்மீரி பண்டிட்கள் இனப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த ஃபரூக் அப்துல்லா, அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும், நிருபர்கள் விடாமல் கேள்விகளால் துளைத்தெடுக்கவே, வேண்டுமானால் பா.ஜ.க. விசாரணைக் கமிஷன் அமைத்து உண்மையை கண்டுபிடிக்கட்டும் என்று கூறிவிட்டு எஸ்கேப்பானார்.

இந்த நிலையில்தான், தனியார் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ், ஃபரூக் அப்துல்லாவுடன் சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தியது. டைம்ஸ் குரூப் எடிட்டரான நவிகா குமார்தான், இந்த நேர்காணலை நடத்தினார். அப்போது, காஷ்மீரி பண்டிட்கள் பற்றி நவிகா கேள்வி எழுப்பவே, அவேசமான ஃப்ரூக் அப்துல்லா, “காஷ்மீரி ஹிந்துக்களின் இனப்படுகொலை தொடர்பான கேள்விகளை என்னிடம் தொடர்ந்து கேட்டால், நான் நேர்காணலில் இருந்து விலகுவேன்” என்று கூறினார். இதையடுத்து, நீதிபதி நீலகாந்த் கஞ்சூ, திகலால் தப்லூ, பத்திரிகையாளர் பிரேம்நாத் பட் உள்ளிட்ட காஷ்மீரி ஹிந்துக்களின் கொலைகள் குறித்து நவிகா குமார் கேட்டதற்கு, “நீங்கள் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதி போல் செயல்படுகிறீர்கள் என்று கூறி, மைக்கைப் பிடுங்கி வீசிவிட்டு கிளம்பி விட்டார்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு ஃபரூக் அப்துல்லாவின் இத்தகைய செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை காஷ்மீரி ஹிந்துவான, டி.வி.9 நெட்வொர்க்கின் செயல் ஆசிரியர் ஆதித்யா ராஜ் கவுலும் பகிர்ந்திருக்கிறார். அதில், “1989-ல் காஷ்மீரி ஹிந்து இனப்படுகொலை குறித்து மூத்த ஆசிரியர் சரியாகக் கேட்டபோது, ​​ஃபரூக் அப்துல்லா நேர்காணலில் இருந்து ஓடிவிட்டார். 1990-லும் இப்படித்தான் காஷ்மீரில் சிறுபான்மை ஹிந்துக்களை மீட்க எந்த முயற்சியும் செய்யாமல் ஓடிப்போய் ஒளிந்துகொண்டு, ஜே.கே.எல்.எஃப். பயங்கரவாதிகள் காஷ்மீரி பண்டிட்களைக் கொல்ல அனுமதித்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it