ஹிஸ்புல் கமாண்டர் என்கவுன்ட்டர்!

ஹிஸ்புல் கமாண்டர் என்கவுன்ட்டர்!

Share it if you like it

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் உயர்மட்ட கமாண்டர் நிசார் காண்டே சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் ஹிந்து சமுதாயத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 ஹிந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீரி பண்டிட்கள் உள்ளிட்ட ஹிந்து சமுதாயத்தினர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். எனவே, பயங்கரவாதிகள் முற்றிலுமாக வேரறுக்கும் பணியில் ராணுவமும், பாதுகாப்புப் படையினரும், ஜம்மு, காஷ்மீர் போலீஸாரும் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

இதையடுத்து, இந்திய இராணுவம், சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில போலீஸார் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையல், அனந்த்நாக் ரிஷிபோரா பகுதியில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு ​​பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கூட்டுக் குழுவினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து, கூட்டுக் குழு சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில், 3 ராணுவ வீரர்களும், பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதியான பயங்கரவாதி நிசார் கண்டே கொல்லப்பட்டான். இவன், 2018-ம் ஆண்டு முதல் பயங்கரவாத இயக்கத்தில் செயல்பட்டு வந்தான். இவன் மீது பல பயங்கரவாத வழக்குகள் இருக்கின்றன. மேலும், 2000-ம் ஆண்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வைத்திரு்ததாக ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் 1978-ன் கீழ் கைது செய்யப்பட்டவன். 2018-ல் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்கு முன்பு, போராளிகள் மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தான். மேலும், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஒரு AK-47 துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கூட்டுக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.


Share it if you like it