காஷ்மீரில் பிரதமரின் நிகழ்ச்சியை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டிய 2 பயங்கரவாதிகளில் பாதுகாப்புப் படை வீரரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, எதிர்வரும் 24-ம் தேதி அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் பாரத பிரதமர் மோடி. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர். அதேசமயம், இத்தாக்குதலில் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் யூசூப் கண்ட்ரோ உட்பட இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் சஞ்வான் பகுதியில் பஸ்ஸில் வந்து கொண்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்) வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒருவர் வீரமரணம் அடைந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல, அதே பகுதியில் மற்றொரு இடத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். பஞ்சாயத்து ராஜ் திவாஸ் தினத்தையொட்டி நாளை மறுநாள் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வரவிருக்கும் நிலையில், அந்நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.