ஜம்மு காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலர்கள்!

ஜம்மு காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலர்கள்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிராம பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

தமிழகத்தில் போலீஸாருக்கு உறுதுணையாக ஊர்க் காவல்படை வீரர்கள் இருப்பதுபோல, ஜம்மு காஷ்மீரில் கிராம பாதுகாப்புக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிராம பாதுகாப்புக் குழுவினரை திருத்தப்பட்ட திட்டம் என்கிற பெயரில் கிராம பாதுகாப்பு காவலர்களாக அரிவித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த கிராம பாதுகாப்பு காவலர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவராகள். இக்குழுக்களுக்கு தலைமை தாங்குபவர்களுக்கு மாதம் 4,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். குழு உறுப்பினர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் வழங்கப்படும். இக்குழுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் எஸ்.பி. மற்றும் எஸ்.எஸ்.பி.யின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும். எனினும், இந்த திருத்தப்பட்ட திட்டம் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், மேற்படி கிராம பாதுகாப்பு காவலர்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுனில் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிராம பாதுகாப்பு குழுவினரை கிராம பாதுகாப்பு காவலர்கள் என்று மறுபெயரிட்டு புதுப்பிப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு கட்டத்தை உயர்த்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it