இந்திய தேசிய ராணுவத்தின், “ஜான்சி ராணி” – ஜானகிதேவர்

இந்திய தேசிய ராணுவத்தின், “ஜான்சி ராணி” – ஜானகிதேவர்

Share it if you like it

ஜானகிதேவர்

இந்திய தேசிய ராணுவத்தின், “ஜான்சி ராணி” படைப் பிரிவின், இரண்டாம் நிலை கமாண்டர், (1925-2014).

ஜானகி தேவர் என்றழைக்கப் படும் ஜானகி ஆதி நாகப்பன் (25 பிப்ரவரி 1925 – 9 மே 2014), மலேசிய இந்திய காங்கிரஸின் நிறுவன உறுப்பினரும், மலேசிய (அன்றைய மலாயா) சுதந்திரத்திற்காக, ஆரம்பக் காலத்தில் போராடிய, சில பெண்களுள் ஒருவராவார்.

ஜானகி, மலாயாவில் ஒரு செல்வ செழிப்பு மிக்க, தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்தியர்களிடையே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக, இந்திய மக்களிடையே பொருளுதவி வேண்டிய போது, ஆற்றிய உரையை, தனது 18 ம் வயதிலேயே கேட்டார். நேதாஜியின் உரையை கேட்ட அவர், தனது காதில் இருந்த கம்மலை கழட்டி நன்கொடையாக வழங்கினார். இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதில், தீர்மானமாக இருந்தார். இதற்கு அவரது குடும்பத்தினரிடையே இருந்தும், குறிப்பாக அவரது தந்தையிடம் இருந்தும், பல எதிர்ப்பு எழுந்தது. ஜானகியின் தொடர் வற்புறுத்தலால், அவரது குடும்பத்தினரும் அவரது தந்தையும் சம்மதித்தனர்.

வசதி மிக்க குடும்பத்தில் பிறந்த அவரால், ஆரம்பத்தில் தனது ராணுவ வாழ்க்கையில், கடுமையான சூழலை சமாளிக்க முடியவில்லை. முதல் நாளில் அவருக்கு ராணுவத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு, அதன் சுவை பிடிக்காமல் அழுதார். எனினும் அவர், படிப்படியாக தனது ராணுவ வாழக்கையை பழகிக் கொண்டார். ராணுவ அதிகாரிகள் தேர்வில் முதலிடம் பெற்றதன் மூலம், படைப் பிரிவில் பதவி உயர்வு பெற்றார். பெண்கள் படைப் பிரிவில், இரண்டாம் நிலை கமாண்டராக உயர்ந்தார்.

1943 ஆம் ஆண்டின் இறுதியில், சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில் உள்ள ஜான்சிராணி படைப் பிரிவில், சுமார் 500 இந்திய பெண்கள் பட்டியலில், ராசம்மா மற்றும் ஜானகி தேவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அங்கே, போர் சூழ்ந்த நேரத்தில் சிங்கப்பூரில் தங்கி இருந்த இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த அரசியல்வாதியின் மகளான டாக்டர் லட்சுமி சாமிநாதனின் பொறுப்பில் அவர்கள் இருவரும் இடம் பெற்றிருந்தனர். தினமும் வழங்கப் பட்ட அணிவகுப்பு பயிற்சி, அவர்களுக்கு கடினமாக இருந்தது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களுக்கு கிடைக்கக் கூடிய வசதிகள் கூட, அவர்களுக்கு அங்கு  கிடைக்கவில்லை. அவர்களுக்கு பழக்கப் படாத சூழலாக அமைந்தது.

ஜானகி தேவர் விவரித்தவை : “அங்கே எல்லாம் மரத்தினால் ஆன, குடிசைகள் மட்டுமே இருக்கும். படுக்கை வசதி கூட இல்லை… நாங்கள் அனைவரும், அதிகாலையில் விழித்து எழ வேண்டும். மணி ஓசை எழுப்பப் பட்டதும், நாங்கள் வெளியேற வேண்டும். அங்கு ஒரே நேரத்தில், ஆயிரம் பெண்கள் குளியலறைக்கு செல்வார்கள். காலையில் குளிர் வாட்டும். குளித்து முடித்த பிறகு, உடற்பயிற்சிக்கு செல்ல வேண்டும். உடற்பயிற்சி அரைமணி நேரம் வழங்கப் படும். அதன்பிறகு, காலை உணவருந்த செல்வோம். அதன் பிறகு, ராணுவப் பயிற்சி வழங்கப் படும்.”

ஜான்சிராணி படைப் பிரிவில் இரண்டாம் நிலை கமாண்டராக இருந்த ஜானகி தேவர், இந்திய தேசிய ராணுவம் நடத்திய “ரங்கூன் முதல் பாங்காக் வரை மாரத்தான் நடைபயணம்” பற்றி அவர் எழுதிய குறிப்பில்: “23 நாட்களுக்கு மேல் கடந்த அந்த நடை பயணத்தில் மனிதர்கள் சென்றிராத காடுகள், கடினமான மலைப் பகுதிகள், கடும் இருட்டு, கொந்தளிப்பான ஆறுகள் மற்றும் ஓடைகள் போன்றவற்றை கடக்க நேர்ந்தது. நடை பயணத்தில், படையினரின் சீருடை தண்ணீரில் நனைந்தும், கந்தலாக கிழிந்தும் இருந்தன. மேலே பறந்த எதிரிகளின் கழுகுப் பார்வை, விமானத்தில் இருந்து தப்பித்த படியே செல்ல வேண்டி இருந்தது.

ஜான்சி ராணி முகாமில் தொண்டர்களுக்கு வழங்கப் பட்ட தினசரி பயிற்சி அட்டவணை:

காலை 8.30 முதல் 9.00 மணி வரை : உடற்பயிற்சி

காலை 9.00 மணி : காலை உணவு

காலை 9.00 முதல் 11.45 வரை : ராணுவப் பயிற்சி

மதியம் 1.00 மணி : மதிய உணவு

மதியம் 2.00 முதல் 3.00 மணி வரை: ஓய்வு

மதியம் 3.00 முதல் 4.30 மணி வரை: இந்துஸ்தானி வகுப்பு

மாலை 4.30 மணி : தேனீருடன் பழங்கள் மற்றும் வேர்க்கடலை அல்லது கேழ்வரகு கஞ்சி வழங்கப் படும்

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை: ராணுவப் பயிற்சியுடன் அரைமணி நேரம் விளையாட்டு

இரவு 8.30 மணி: இரவு உணவு

இரவு 9.30 முதல் 11.00 மணி வரை: சொற்பொழிவு

இரவு 11.00 மணி : விளக்குகள் குளிரூட்டப்படும்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு, ஜானகி தேவர் சமூகநல செய்ற்பாட்டாளரானார். அவர், மலாயாவில் இந்திய காங்கிரஸில் இணைந்து, நாட்டில் உள்ள அனைத்து ரப்பர் எஸ்டேட்களையும் பார்வையிட்டார். அதில் கிடைத்த அனுபவம் மூலம், இந்திய மக்களுக்கான அரசியல் அமைப்பின் தேவையை உணர்ந்தார்.

ஜானகி தேவர் அவர்கள், 9 மே 2014 அன்று, தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

சரவணக்குமார்


Share it if you like it