நேருவின் தவறுகள் : மறைக்கப்படும் வரலாற்று உண்மைகள்!

நேருவின் தவறுகள் : மறைக்கப்படும் வரலாற்று உண்மைகள்!

Share it if you like it


பாரதத்தின் முதல் பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜவஹர்லால் நேரு, தன் பதவிக்காலத்தில் எடுத்த சில தவறான முடிவுகளுக்கு நம் நாடு இன்றுவரை விலை கொடுத்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தவறான அணுகுமுறையை கையாண்டது முதல் சீனாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பரிசளித்தது வரை, அவர் செய்த தவறுகளால் இன்று நம் தேசம் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது.

ஆனால், நம் மக்களுக்கு இந்த உண்மைகள் இதுவரை தெரியவில்லை.
அதற்கு முக்கிய காரணம் இந்த உண்மைகள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. யாராவது இந்த உண்மைகளை சுட்டிக்காட்டினாலும் அதை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.
இதில் முக்கிய பங்காற்றியவர் ஜவஹர்லால் நேருவின் மகளும் இந்தியாவின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி.

இவரது, தலைமையிலான காங்கிரஸ் அரசின் உத்தரவின் பேரில், ஜவஹர்லால் நேருவின் நல்ல பணிகள் மட்டுமே இந்திய அரசின் மேற்பார்வையில் ஆவணப்படுத்தப்பட்டது. ஆனால் அவ்வப்போது நேருவின் குளறுபடிகளை யாராவது கண்டுபிடித்து வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸின் முயற்சிகளால் அவை அதிக கவனம் பெறுவதில்லை.

சமீபத்தில் நேருவின் குளறுபடிகள் வேண்டுமென்றே வரலாற்றில் இருந்து அழிக்கப்படுகின்றன என்ற உண்மை டுவிட்டரில் பதிவிடப்பட்டு வைரலானது. இதுபோல் வரலாற்று ஆவணங்கள் எப்படியெல்லாம் மூடி மறைக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கு பார்ப்போம்.
1946ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, பீகாரில் பாட்னாவிற்கு அருகிலுள்ள நகர்நௌசா கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 400 இந்து விவசாயிகள் கொல்லப்பட்டனர். அப்போது இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக இருந்த நேரு அந்த சமயத்தில் பீகாரில் தான் இருந்தார்.

அவரது உத்தரவின் பேரில் தான் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக நம்பப்பட்டது. நேரு இது குறித்து எழுதிய பல கடிதங்கள் இதை உறுதிப்படுத்தின. இந்த கடிதங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் “ஹே ராம்” என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 1984 இல் வெளியிடப்பட்ட ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் பகுதி 1 மற்றும் பகுதி 2ல் இந்த கடிதங்கள் வெளியிடப்பட்டன. இந்த 2 புத்தகங்களும் 1989 இல் மீண்டும் வெளியிடப்பட்ட போதும் இந்த கடிதங்களும் அதில் இருந்தன. ஆனால் மூன்றாவது முறையாக 2003ல் அதை நேரு நினைவு நிதியத்தின் இணையதளத்தில் வெளியிடும் போது பீகார் கலவரம் தொடர்பாக நேரு எழுதிய கடிதங்கள் மறைந்துவிட்டன.

இந்தக் கடிதங்களின் உள்ளடக்கமே அவை காணாமல் போனதற்குக் காரணம். நவம்பர் 5, 1946 இரவு, நாகர்நௌசா துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, பாட்னாவைச் சேர்ந்த தனது நெருங்கிய தோழி பத்மஜா நாயுடுவுக்கு நேரு எழுதிய காணாமல் போன கடிதத்தின் விவரம் பின்வருமாறு.

” என் அன்புக்குரியவளே,
இன்று மாலை, நான் பாகல்பூரில் இருந்து விமானம் மூலம் திரும்பினேன். வந்தவுடன், இங்கிருந்து சில மைல்களுக்கு அப்பால் கிராமப்புறங்களில் இருந்த விவசாயிகள் கூட்டத்தின் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், அதில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதையும் அறிந்தேன். பொதுவாக இந்த மாதிரியான செய்திகள் என்னை பயமுறுத்தியிருக்கும், ஆனால் இதைக் கேட்டு நான் மிகவும் நிம்மதியடைந்தேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஒருவேளை நாம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதால் இருக்கலாம். புதிய அனுபவம் மற்றும் உணர்ச்சிகளின் அடுக்குகள் நமது பழைய சிந்தனையை மறைக்கின்றன.”

“இந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக எந்தத் தடையும் இல்லாமல் தங்கள் வழியில் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் (விவசாயிகள்) நிறுத்தப்பட்டதாகவும் அவர்களில் 400 பேர் இறந்ததாகவும் செய்தி வரும்போது, இந்த சமநிலை மிகவும் குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்று நேரு சிறிதும் மன வருத்தமில்லாமல் எழுதியுள்ளார்.

நேருவின் இந்தக் கடிதம் ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் 2ம் தொகுதியில் 65வது பக்கத்தில் இருந்தது. ஆனால் 2003ல் அது காணாமல் போனது. அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இது இந்திய வரலாற்றை நேரடியாக சீர்குலைக்கும் செயலாகும்.

இது போல் எத்தனை ஆவணங்கள் மறைக்கப்பட்டன என்பது யாருக்கும் தெரியாது. இந்த சதிவேலையை செய்வது யார்? அதற்கான நிதியை அளிப்பது யார் ? காங்கிரஸ் கட்சியா அல்லது காந்தி குடும்பமா? உண்மையில் இந்த ஆவணங்கள் இந்திய அரசின் சொத்து.

இது நாட்டின் பாரம்பரியம். எந்த குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தும் அல்ல. முக்கியமாக, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எப்படி இந்த அறிவுப்பூர்வமான சதிகள் எல்லாம் நடைபெறுகின்றன? நம் வரலாற்றின் உண்மைகள் மறைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இதுபோன்ற அரசியல் சதிகளை முறியடிப்பது அவசியம்.


Share it if you like it