தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிகளின் மதமாற்றும் சம்பவம் அதிகரித்து விட்டது. எங்கு சென்றாலும் இவர்கள் தொல்லை தாங்கவில்லை.பேருந்து நிலையம், ரயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் நின்று கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது, கிறிஸ்துவ பாட்டு பாடுவது என மக்களை மதமாற்றம் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை காவல் துறையினரும், அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுத்த வண்ணம் இல்லை.
இந்நிலையில் தேனியில் மதமாற்றம் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகர் காலணியில் பொட்டியம்மன் கோவில் அருகில் உள்ள சட்ட விரோத ஜெப கூடமா ஒன்று உள்ளது. அந்த ஜெபக்கூடத்தில் இந்து சிறுவர்களுக்கு சம்மர் கிளாஸ் என்கிற பெயரில் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கின்றனர். சம்மர் கிளாஸ் நடத்துவதாக சொல்லி தலையில் இயேசு கிரீடம் வைத்து மதமாற்றம் செய்து வந்துள்ளனர். ஜேம்ஸ் ராஜா என்ற கிறிஸ்துவ மிஷனரிகள் இந்த சட்ட விரோத மதமாற்றத்தை நடத்தி 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை மதமாற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து இந்துமுன்னணி களத்திற்கு சென்று தடுத்து நிறுத்தி அந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் மதமாற்றம் பற்றிய ஆபத்தை எடுத்து கூறினர்.