தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரபல அனிஃபா பிரியாணி ஹோட்டலில் கேட்டபோன உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த கடையில் இருந்து 38 கிலோ கெட்டுப்போன சிக்கன், பரோட்டா, சப்பாத்தி மாவு, பிரட் அல்வா உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்துள்ளனர்.
சமீப காலமாக இதுபோல் சம்பவம் தமிழகத்தில் ஆங்காங்கே அதிக அளவில் நடக்க ஆரம்பித்து விட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதேபோல் சமீபத்தில் மேற்கு தாம்பரத்தில் ஆலிப் பிரியாணி கடையில் சௌந்தரராஜன் என்பவர் சிக்கன் கிரேவி வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளார். வீட்டில் அதை பிரித்து பார்த்த போது அதில் புழுக்கள் இருந்தது. உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே பிரியாணி பிரியர்கள் பிரியாணி சாப்பிட விரும்பினால் கடையில் இறைச்சியை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். இதுபோல் உணவகத்தில் சென்று சாப்பிடுவதை தவிர்த்தல் உடலுக்கு நல்லது.