தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள்களின் நடமாட்டமும், கொள்ளை சம்பவமும் அதிகரித்து விட்டது. சமீபத்தில் பாடகி சுசித்ரா அவர்கள் குமுதம் யூ- டியூப் சேனலில் நேர்காணல் ஒன்றில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் போதை பொருளான Cocaine (கொகைன்) அளிக்கப்படுகிறது என்றும், தமிழ் திரைப்பட உலகில் (Kollywood) போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சைதாப்பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து கொலை நடுங்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்த்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சைதாப்பேட்டையில் ஒரு வீட்டிக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மனைவி மற்றும் மகன் கண்ணெதிரில் 27 வயது நபர் ஒருவரை சராமரியாக வெட்டிக் கொன்றிருக்கிறது ஒரு கும்பல். கொலையுண்ட நபர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள போதிலும் இந்த கொடூர கொலை சென்னை நகரத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொலை நகரமாக சென்னை மாறாது இருக்க இது போன்ற ரவுடி கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் காவல்துறைக்கு உள்ளது.
அரசின் குறைபாடுகளை விமர்சிப்பவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கும் ‘வரும் முன் காப்போம்’ என்கிற தமிழக ‘திராவிட மாடல்’ அரசு, சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதை கும்பல்களின் அராஜகங்களை, கூலிப்படைகளின் கொட்டத்தை அடக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.