33 அரசு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றம்!

33 அரசு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றம்!

Share it if you like it

33 அரசுப் பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளக் கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கூட்டணி அரசும் துணை போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில்தான், அம்மாநிலத்தில் 33-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும், அப்பள்ளிகளில் ஞாயிறுக்கிழமை வாரவிடுமுறைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, முதல்வர் ஹேமந்த் சோரனின் சொந்த ஊரான தும்காவில்தான் 33 அரசுப் பள்ளிகள், அப்பகுதி முஸ்லீம்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருது பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி, தும்காவின் ஷிகாரிபாரா பிளாக்கில் 10 அரசு பள்ளிகள், ரணிஷ்வர் பிளாக்கில் 8 பள்ளிகள், சராயஹாட் பிளாக்கில் 7 பள்ளிகள், ஐமா பிளாக் மற்றும் ஜர்முண்டி பிளாக்கில் 2 பள்ளிகள், கதிகுண்ட் பிளாக் மற்றும் தும்கா பிளாக்கில் தலா ஒரு பள்ளிகள் உருது பள்ளிகளாக மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை வார விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இப்பள்ளிகளின் பெயர்ப் பலகைகள் உருது மொழியில் மாற்றம் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கூட்டணி அரசு இவ்வாறு செய்கிறது என்று கொந்தளிக்கும் பா.ஜ.க.வினர், இது போன்ற செயல்பாடுகள் சட்டத்திற்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என்று குற்றம்சாட்டி இருக்கிறது. ஆகவே, இதற்கு முதல்வர் ஹேமந்த் சோரன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தி இருக்கிறது. ஏற்கெனவே, இதேபோல தும்காரா மாவட்டத்தில் 40 அரசுப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, மீண்டும் ஞாயிற்றுக்கிழமையே வார விடுமுறை விடப்படும் என்று பள்ளி நிர்வாகம் எழுதிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, உருது பள்ளிகளாக மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை விசாரணை மேற்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தும்கா பள்ளிக் கல்வித்துறை தலைவர் சஞ்சய் குமார் தாஸ் கூறுகையில், “இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்குமாறு 33 பள்ளிகளின் கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். மேற்கண்ட கல்வி நிறுவனங்களுடன் எவ்வாறு உருது இணைக்கப்பட்டது என்பது குறித்தும், எந்த நிபந்தனைகளின் கீழ் அரசுப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை வார விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது. அறிக்கை கிடைத்த பிறகு, நாங்கள் விசாரணையைத் தொடங்குவோம். மற்றபடி வெள்ளிக்கிழமை பள்ளிகளை மூடுவதற்கு துறையிலிருந்து எந்த அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வகுப்பறையின் கரும்பலகையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதியதற்காக 4-ம் வகுப்பு மாணவனை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது அபுல் கலாம் கொடூரமாகத் தாக்கினார். இதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை அறிவித்தனர். உடனே, மேற்கண்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இத்போல ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், குழந்தைகள் கைகளைக் கூப்பி இறைவனை வணங்குவதை தடுக்கும் வகையில், ஷரியா மற்றும் இஸ்லாமிய நடைமுறைகள் திணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it