பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்: வேட்பாளர் உட்பட 3 பேர் கைது!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்: வேட்பாளர் உட்பட 3 பேர் கைது!

Share it if you like it

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பிய வேட்பாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 10 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மே 14 முதல் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9-ம் தேதி அறிவித்தது. முதற்கட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கியது. மாநிலத்தின் 21 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் இத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கிரிதிஹ் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. காண்டே காவல் நிலையத்துக்கு உட்பட்ட டோகோடி பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக, வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த ஊர்வலத்தின்போதுதான் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது.

டோகோடி பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான முகமது ஷகிர் ஹுசைன் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் உடனடியாக போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, ஷகிர் உட்பட 10 பேர் மீது லோக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, ஷகிர், அவரது ஆதரவாளர்களான ஆசிப் மற்றும் சோஹைப் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம் எழுப்பப்பட்ட வீடியோவை வைத்து இதர குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.

blank


Share it if you like it