ஹிந்து பெண் தீவைத்து எரிப்பு: ஷாருக் உசைன் கைது!

ஹிந்து பெண் தீவைத்து எரிப்பு: ஷாருக் உசைன் கைது!

Share it if you like it

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹிந்து பெண் உயிருடன் தீவைத்து வைத்து எரிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமது ஷாருக் உசைன் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் ஜருதிஹ் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் சிங். இவரது மகள் அங்கிதா குமாரி. இளம்பெண்ணான இவரை, பக்கத்து வீட்டில் வசித்து வரும் முகமது ஷாருக் உசைன் என்பவன் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான். அவனது காதலை அங்கிதா ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அங்கிதா மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்திருக்கிறான் ஷாருக் உசைன். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் அங்கிதாவை சந்தித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கூறியிருக்கிறான். ஆனால், அப்போதும் அவனது காதலை ஏற்க மறுத்து விட்டார் அங்கிதா.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கிதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது பின்புறம் நெருப்புபோல் கொதிப்பதைக் கண்டு திடுக்கிட்டு முழித்திருக்கிறார். அப்போது, தனது உடல் தீயில் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து கதறித் துடித்தார். உடனே, பக்கத்துக் அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது பெற்றோரை நோக்கி ஓடியிருக்கிறார். பின்னர், தீயை அணைத்த அவர்கள், அங்கிதாவை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கிதா அதிகாலை நேரத்தில் இறந்து விட்டார்.

இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த முகமது ஷாருக் உசைன், சம்பவத்தன்று இரவு அங்கிதாவின் அறைக்குள் பெட்ரோலை ஊற்றி தீவைத்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஷாருக் உசைனை கைது செய்தனர். ஆனால், இந்த செய்தியை எந்த தமிழக ஊடகங்களும் வெளியிடவில்லை. பிற மதத்தினருக்கு ஹிந்துக்களால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், அதை ஊதிப் பெரிதாக்கும் தமிழக ஊடகங்கள், இதே பிற மதத்தவரால் ஹிந்துக்களுக்கு நடக்கும் அநியாயங்களை மட்டும் இருட்டடிப்பு செய்வது ஏன் என்று ஹிந்துக்களும், நடுநிலையாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.


Share it if you like it