பாஜகவில் இணைந்த ஜான் பாண்டியன் !

பாஜகவில் இணைந்த ஜான் பாண்டியன் !

Share it if you like it

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவானது தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் வகையில் வளர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. பாஜகவின் வளர்ச்சியால் மற்ற கட்சிகளில் உள்ள முக்கியமான நிர்வாகிகள் கூட தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தற்போது பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. பல்லடத்தில் இன்று நடைப்பெறவுள்ள பிரம்மாண்டமான பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் ஜான் பாண்டியன் பங்கேற்க போகிறார்.

முன்னதாக பாஜக கூட்டணியில் விஜயதரணியும், ஜி.கே.வாசனின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it