நகர்ப்புற உள்ளாட்சி இடப்பங்கீடு தொடர்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி. தி.மு.கவினரால் அவமதிக்கப்பட்ட காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் தி.மு.க அமைச்சரின் உள்நோக்கம் இருக்க கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு திட்டத்தின் மூலம், கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, முகாம்கள் நடத்தி அவர்களுக்கு தேவையான உபகரணங்களை, உடனே வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கி ஒன்றினை சமீபத்தில் வழங்கி இருந்தார். தனது கடிதத்திற்கு உரிய பதிலை மாவட்ட ஆட்சியர் வழங்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திடீர் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
கரூர் எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு, அதே மாவட்டத்தை சேர்ந்தவரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சரும்மான செந்தில் பாலாஜி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அவ்வபொழுது அமைச்சருக்கும், காங்கிரஸ் எம்பிக்கும் இடையில் சிறு சிறு பிரச்சனைகள் தலைதூக்கி வருவதை அவர்களின், அறிக்கைகள், பேட்டிகள், வாயிலாக எளிதில் நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இடப்பங்கீடு தொடர்பாக கரூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்பொழுது தான் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. தி.மு.கவினரால் அவமதிக்கப்பட்ட காணொளி காட்சி ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் ஒன்றும் உங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரவில்லை, என்று ஆவேசமாக அவர் பேசிய படியே தி.மு.க அலுவலகத்தை விட்டு வெளியேறினார். ஜோதிமணி மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உள்நோக்கம் இதில் இருக்க கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.