காங்., எம்.பி.யின் இரட்டை நாக்கு!

காங்., எம்.பி.யின் இரட்டை நாக்கு!

Share it if you like it

காங்கிரஸ் எம்.பி.யின் இரட்டை முகத்தை நெட்டிசன்கள் தோலுரித்து இருக்கின்றனர்.

சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களை தேர்ந்தெடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ‘இசைஞானி இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, திரை உலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலர் இளையராஜவிற்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள். இசையின் தேவதூதனைக் கூட பா.ஜ.க தலித் என்கிற சாதிய அடையாளத்தோடுதான் பார்க்கும். தயவு செய்து மதம், சாதி தாண்டி மனிதர்களையும், அவர்கள் சாதனைகளையும் பாருங்கள். இந்த மண்ணில் அமைதி நிலவும். என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால், இதே ஜோதிமணி பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சன்னி நியமனம் செய்யப்பட்ட பொழுது கூறியதாவது; இது ஒரு முடிவு அல்ல ஆரம்பம் தான், காங்கிரஸ் வேண்டுமானால் உத்தர பிரதேசத்தில் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால், தலித் மிஷனில் ராகுல் காந்தி வெற்றி பெற்று விட்டார். வாழ்த்துக்கள் சன்னி சார் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே முதல்வர் நீங்கள். சமூக நீதி மற்றும் தலித் சமூகத்திற்கான உறுதியான தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி மீண்டும் நிருபித்துள்ளது. சரியான தேர்வினை செய்த ராகுல் காந்தி அவர்களுக்கும் பஞ்சாப் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it