ஊழலை பாதுகாப்பதுதான் திராவிட மாடலா? ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர்கள் சரமாரி கேள்வி!

ஊழலை பாதுகாப்பதுதான் திராவிட மாடலா? ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர்கள் சரமாரி கேள்வி!

Share it if you like it

மக்களை இனியும் முட்டாளாக்கக் கூடாது. வெட்கத்தை விட்டு ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரஸாக குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்று, தி.மு.க. அரசின் 2 ஆண்டு ஆட்சி எப்படி என்பது குறித்து பத்திரிகையாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் துக்ளக் ரமேஷ், தராசு ஷ்யாம், லட்சுமணன், செந்தில்வேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பலரும் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால ஆட்சி குறித்து ஏகப்பட்ட விமர்சனங்களை வைத்தனர். துக்ளக் ரமேஷ் பேசுகையில், “தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஏராளமானவற்றை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத்தொகை என்று முதலில் அறிவித்தார்கள். ஆனால், தற்போது தகுதியுள்ள என்று ஒரு நிபந்தனையை வைக்கிறார்கள்.

சொத்துவரியை கடுமையாக உயர்த்தி விட்டார்கள். மின் கட்டணம் தாங்க முடியாத அளவுக்கு உயர்வு. நகையை அடமானம் வையுங்கள் என்று மக்களை தூண்டிவிட்டு பிரசாரம் செய்த கட்சி இதுவாகத்தான் இருக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதுதான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை” என்றார். லட்சுமணன் பேசுகையில், “சமையல் கேஸ் மானியம் தர முடியுமா முடியாதா… மாதம்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு சாத்தியமா இல்லையா… வெட்கமே இல்லாமல் பொதுவெளியில் மக்களிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் விளக்க வேண்டும். இனியும் மக்களை முட்டாளாக்காதீர். திராவிட மாடல் என்பது ஊழலை பாதுகாப்பதா?” என்றார்.

மற்றும் தராசு ஷ்யாம், செந்தில்வேல் உள்ளிட்டோர் என்ன பேசினார்கள் என்பத தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.


Share it if you like it