மத அரசியலை தூண்டும் நெறியாளர் செந்தில்..!

மத அரசியலை தூண்டும் நெறியாளர் செந்தில்..!

Share it if you like it

தமிழகத்தில் இருந்து ஆட்களை அழைத்து சென்று 5 மாநில தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நெறியாளர் செந்தில் கூறியிருப்பது மத அரசியலை தூண்டும் வகையில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில், இன்னும் சில மாதங்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், பா.ஜ.க, உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் தலை சிறந்த அரசியல் வல்லுர்கள் பா.ஜ.க.வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இது பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல், தி.மு.க ஆதரவாளர் என்று கூறப்படும் நெறியாளர் செந்தில், உ.பி.யில் பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், பெரியார் கொள்கைகளை ஆதரித்தும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என, சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது, எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால். இந்தியாவில் அவர்கள் வைப்பதுதான் சட்டம். எனவே, எதிர்வரும் 5 மாநில தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக பிரச்சராம் செய்ய வேண்டும். உருது, இந்தி மொழி, தெரிந்த நபர்களை இங்கிருந்து அழைத்து சென்று. அங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மத அரசியல் செய்ய கூடாது, தமிழகத்தில் மத அரசியல் எடுபடாது என்று கூறும் இவர், பிற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக தமிழகத்தில் இருந்து ஆட்களை அழைத்து சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறுவது மத அரசியலின்றி வேற என்னவாக இருக்க முடியும்.

தவிர, பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி தற்கொலை; பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், வன்கொடுமைகள், கழக கண்மணிகளின் சேட்டைகள். மோசமடையும் சட்டம், ஒழுங்கு என, தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதை பற்றி எல்லாம் வாய் திறக்காத அவர், பா.ஜ.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.


Share it if you like it