கென்ய நாட்டை சேர்ந்த ‘யேசு வா டோங்கரேன்’ தனக்கு பாதுகாப்பு வழங்கும் படி காவல்துறையில் முறையிட்டுள்ளார். இச்சம்பவம், அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய நாட்டை சேர்ந்தவர் ‘யேசு வா டோங்கரேன். இவர், இயேசுவின் மறுபிறவி நான் தான் என்று கூறிக்கொண்டு, அந்நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கி வந்துள்ளார். இந்தநிலையில், பங்கோமா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் சிலுவையில் அறைந்து 3-ஆம் நாளில் உயிர்தெழுந்து வந்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம் என்று கூறியிருக்கின்றனர்.
இதானல், அதிர்ச்சியடைந்த டோங்கரேன் தான் ஒரு டுபாக்கூர் என்பதை மக்கள் கண்டுபிடித்து விட்டால், தன்னை சிலுவையில் அறைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், காவல்துறையில் தனக்கு பாதுகாப்பு வழங்கும் படி மனு அளித்துள்ளார்.
இதனிடையே, கென்ய நாட்டை சேர்ந்தவர் பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா. இவர், கொரோனா நோய் தொற்றை தன்னால் குணப்படுத்த முடியும் என உள்ளுர் மக்களிடம் கூறியிருக்கிறார். இதனை நம்பி, ஏராளமானவர்கள் தேவாலயத்தில் கூடியிருக்கின்றனர். அந்தவகையில், தன்னை நாடி வந்த மக்களுக்கு பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா டெட்டாய்ல் கொடுத்து இருக்கிறார். பாதிரியார் பேச்சை நம்பி டெட்டாய்ல் குடித்த 59 பேரும் பரலோகம் சென்ற சம்பவம் தான் கொடுமையிலும் கொடுமை.
நோய் நீங்க தேவாலயம் வந்தவர்களுக்கு பாவம் செய்த பாதிரியார் தற்போது பரிதாபமாக சிறையில் வாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.