கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள தேவியானந்தல் எனும் கிராமத்தைச் சார்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதியும், அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ரங்கசாமி வேறு சமூகம் என்பதால். அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதனை அடுத்து சரஸ்வதிக்கு, வேறொரு இடத்தில் மாப்பிள்ளை, பார்த்துள்ளனர் சரஸ்வதியின் பெற்றோர்கள். இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று சரஸ்வதி மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கு. தி.மு.க மூத்த தலைவரும் நாடாளுமன்ற, உறுப்பினருமான கனிமொழி. மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு. மிகப் பெரிய அரசியல் நாடகம் நடத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் உளுந்தூர் பேட்டையில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து ஜோதிமணி, சுந்தரவள்ளி, கனிமொழி, போன்றவர்கள் ஏன்? வாய் திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் பலர் வினா எழுப்பி வருகின்றனர்.