ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்: –  பாலகிருஷ்ணன் அறிவுரை!

ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்: – பாலகிருஷ்ணன் அறிவுரை!

Share it if you like it

பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக சி.பி.ஐ ( எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, சமூக ஆர்வலர்கள், சுற்றுசூழல் நிபுணர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், சி.பி.ஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நிதி நெருக்கடியான சூழலில் கூடுதலான பணம் இதற்கு செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. ஆனால், எப்படிப் பார்த்தாலும் நினைவுச் சின்னம் அமைக்க செலவாகத்தானே செய்யும். கடலுக்குள் சின்னம் வைப்பதற்கு எதிராக பல கருத்துகள் வருகின்றன. கடலுக்குள் கட்டுமானமே செய்யக் கூடாது எனவும் கூற முடியாது. சர்ச்சையில்லாமல், எல்லோரும் ஏற்றுக் கொள்கிற வகையில் சின்னம் அமைத்தால் நல்லது என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it