சென்னை மேயரை ஒருமையில் அழைத்த அமைச்சர் கே.என்.நேருவின் செயலுக்கு பல்வேறு தரப்பிலுமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. பெரும்பாலும், இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அரசியல் அரங்கில் பேசுப்பொருளாக மாறிவிடுவது வழக்கம். அந்தவகையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்கு கேட்போம் அல்லது மாணவர்களை பிட் அடிக்க அனுமதிப்போம் என்று தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்பு ஒருமுறை பேசி இருந்தார்.
இதையடுத்து, மேகதாது விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கே.என். நேருவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, காவிரி விவகாரம் internal politics என்னிடம் திருச்சி politics மட்டும் கேளுங்கள் என அறிவுபூர்வமான பதிலை கொடுத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, திசைகாட்டு திருச்சி என்ற இணையவழி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கே.என்.நேரு, பீகார்காரனுக்கு மூளை கிடையாது என்று கிண்டலாக பேசி இருந்தார். இதில், யாருக்கு மூளை கிடையாது. யாருக்கு, ரூ.350 கோடி கொடுக்கப்பட்டது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். இப்படியாக, இவரது பேச்சும் செயல்பாடுகளும் அமைந்து வருகிறது. இதுதவிர, சில நேரங்களில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தோழர்களையும் இவர் கண் கலங்க வைப்பது உண்டு. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி.யை ஒருமையில் விமர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் கே.என். நேரு சென்னை மேயர் பிரியாவிற்கு, உரிய மரியாதையை வழங்காமல் நீயே சொல்லுமா? எம்மா இப்படி நீ நிற்பியாம் என பத்திரிகையாளர் முன்பே கூறியிருக்கிறார். இந்த காணொளி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.