நீதிமன்ற உத்தரவுபடி கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு இருப்பது ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் கடலூர் எம்.பி.யாக இருப்பவர் ரமேஷ். இவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அம்மாவட்ட, மக்களின் கடும் கோவத்திற்கு உள்ளாகி இருப்பவர். இவரது, முந்திரி ஆலையில் பண்ருட்டி மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர் வேலை செய்து வந்தார். அந்த வகையில், தனக்கு சற்று கூலி உயர்வு அதிகம் வேண்டும் என அவர் மேலிடத்தில் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சில நாட்கள் கழித்து ஆலையின் அருகே கோவிந்தராஜின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மர்ம மரணத்திற்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. எனினும், அதிகார வர்கத்தினர் கோவிந்தராஜை அடித்து, துன்புறுத்தி கொன்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. எம்.பி.யின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதாவது, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள தனது இடத்தை வைத்து டி.எம்.பி. வங்கியில் கடன் பெற்றுள்ளார். அந்த வகையில், நிலுவைத் தொகை ரூ. 45 கோடி கட்டாமல் ரமேஷ் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்புடன், அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.