கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Share it if you like it

ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா மற்றும் 75-வது சுதந்திர தின விழா ஆகிய முப்பெரும் விழாக்களை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கள்ளக்குறிச்சியில் நேற்று அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோட்டில் இருந்து மாலை 4 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அணிவகுப்பு ஊர்வலத்தை ஏமப்பேர் எம்.ஏ.ஜி.சரண் ஸ்டீல்ஸ் உரிமையாளர் எம்.ஏ.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு ஊர்வலம் மாலை 5 மணியளவில் மந்தைவெளி திடலில் முடிவடைந்தது. அணிவகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த தொண்டர்கள் 310 பேர், சீருடை அணியாத ஆண்கள் 346 பேர், பெண்கள் 40 பேர் என மொத்தம் 696 பேர் கலந்து கொண்டனர்.

மாலை 5.30 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி ஸ்ரீசந்திரன் பில்டர்ஸ் உரிமையாளர் சி.சத்தீஸ்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீஜெயலட்சுமி ஹைடெக் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் வி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். மாநில மக்கள் தொடர்பு பிரிவு செயலாளர் எஸ்.கல்யாண் சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி நகர கார்யவாஹ் கல்கி.நாராயணன் நன்றி கூறினார். ஜில்லா சங்கசாலக் பி.எஸ்.ஆர்.மகாதேவன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


Share it if you like it