அரசியலுக்கு உகந்தவர் இல்லை கமல் – புளுசட்டை மாறன் !

அரசியலுக்கு உகந்தவர் இல்லை கமல் – புளுசட்டை மாறன் !

Share it if you like it

திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் அவர்கள் கமல்ஹாசனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். உடன் ஒரு காணொளியையும் இணைத்துள்ளார். அதில், நம்மவர் 69 பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து சொல்ல வந்த மக்களை தள்ளி நிற்க வைத்து.‌. அவர்களின் கைகளை தொடாமல் வணக்கம் போட்ட கமல்.சினிமாக்காரர் அல்லது செல்வந்தராக இருந்தால் அருகில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

ஆக.. அவரின் கைகள் உங்கள் தோளினை அரவணைத்து புகைப்படமெடுக்க விரும்பினால்.. நீங்கள் சினிமாக்காரர் அல்லது செல்வந்தராக இருக்க வேண்டும். ஏனெனில்.. தற்போது இருப்பது விக்ரம் வெற்றிக்கு பிறகு மாறியுள்ள கமல். வீடியோவை பார்த்ததும்.. கமல் அரசியலுக்கு உகந்தவர் இல்லை என்பது மீண்டும் உறுதியானது.

அவர் சாமானியர்களுக்கு உகந்த அரசியல்வாதி அல்ல. எப்போதும் ELITE வட்டத்துடன் அவரது வாழ்க்கையை நடத்துவது சிறந்தது.

பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தும்.. நாலாபுறமும் இடைவெளி ஏற்படுத்தி‌.. குறுக்கே தடை அமைத்து.. வணக்கம் போட்ட கமல்.

இவரிடம் கை குலுக்கி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்.

திருப்பதி பாலாஜி கோவிலை விட கெடுபிடி காட்டிய கட்சியினர் மற்றும் பவுன்சர்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Share it if you like it