ஏற்கனவே திமுகவின் ஆ.ராசா முதல்வரின் தயை அவமதித்தது, திமுகவின் பிரச்சார பீரங்கியை ஐ.லியோனி தமிழக பெண்களின் இடுப்பை பற்றி பேசியது என பெண்கள் மீதான தொடர் தாக்குதலால் கொதித்து போயுள்ள தமிழக பெண்களுக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்தும் விதமாக, பெண்னென்றும் பாராமல் பாஜக, வேட்பாளர் திருமதி.வானதி ஸ்ரீனிவாசனை மக்கள் நீதி மய்யத்தினர் துக்கடா அரசியல்வாதி என இழிவுபடுத்தி உள்ளனர்…
சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்த மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை கமலுடன் நடத்த வேண்டும் என கூறி இருந்தார். ஆனால் இதற்கு பதிலளித்திருந்த கமலின் மய்யத்தினர் முதலில் தான் பிரதமருடன் தான் விவாதம் நடத்துவேன், பின்னர் மத்திய அமைச்சர்களுடன் நடத்துவேன், பின்னர் வானதி ஸ்ரீனிவாசன் போன்ற துக்கடாக்களுடன் நடத்துவேன் என அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக வானதி அவர்கள் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
"துக்கடா வானதி"???
மக்கள் நீதி மையத்தின் அனாகரிகமான விமர்சனம்!#Vanathi4KovaiSouth #KovaiSouth #CoimbatoreSouth pic.twitter.com/CqExfRK1dS
— R.vigneshvasudev (@Rvigneshvasude) March 29, 2021