மதுரை: ஹிஜாப் அணிந்து வாக்கு செலுத்த வந்த இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பா.ஜ.க.வின் வாக்குச்சாவடி முகவருக்கு நடிகர் கமலஹாசன் கண்டம் தெரிவித்து இருந்தார். இதற்கு, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மேலூர் 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில், ஹிஜாப் அணிந்து வாக்கு செலுத்த வந்த இஸ்லாமிய பெண்மணியிடம் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்து இருந்தார் பா.ஜ.க.வின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜன். இவர், சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை செய்ததற்கு வாக்கு சாவடியை விட்டு அப்புறப்படுத்தியது மட்டுமில்லாமல், இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. இதற்கு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பா.ஜ.க ஜாதி மத அரசியல் செய்கிறது என்று உண்மைக்கு புறம்பாக தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்த வகையில், பி.ஜே.பி தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது, நடிகர் கமலஹாசன் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பபட்டது. ’அவரே ஒரே குழப்பமாக இருக்கிறார் விக்ரம் படம் நடிக்க வேண்டுமா? அல்லது பிக்பாஸ் நடிக்க வேண்டுமா? அடுத்த வருடம் இன்னொரு படம் நடிக்க வேண்டுமா? எப்பொழுது அவர் சீரியஸான அரசியல்வாதியாக மாறுகிறாரோ அப்பொழுது நான் பதில் சொல்கிறேன் என்று அண்ணாமலை குணா பட நடிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.