திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 -ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை.
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தி.மு.க எம்பி கனிமொழி தலைமையில் கிண்டியில் உள்ள ஆளுர் மாளிகையை நோக்கி மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல முன்னணி தலைவர்கள் உ.பி அரசை கண்டித்தும், பா.ஜ.க அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்தும் அக்கூட்டத்தில் பேசினர்.
பாலியல் சீண்டல் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, கோவை மாவட்டத்தை சேர்ந்த பொன்தாரணி என்னும் பள்ளி சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே பள்ளி செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக பத்திரிக்கைகள், ஊடகங்களில், வந்து கொண்டு இருக்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றால் உடனே கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற கனிமொழிக்கு விடியல் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள், அட்டூழியங்கள், குறித்து எப்பொழுது தான் பேசுவார்? எப்பொழுது தனது ஆர்ப்பாட்ட தேதியை அறிவிப்பார் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.