“ஆகத்து சரி, எங்கேய்யா ச், த்”… திருமாவுக்கு பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர்!

“ஆகத்து சரி, எங்கேய்யா ச், த்”… திருமாவுக்கு பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர்!

Share it if you like it

தூய தமிழ் என்கிற பெயரில் ஆகஸ்ட் மாதத்தை ஆகத்து என்று அச்சடித்து திருமாவளவன் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரை பார்த்து ஒற்றெழுத்து எங்கே என கேள்வி எழுப்பி பாடம் நடத்தி இருக்கிறார் தமிழ் ஆசிரியர் ஒருவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூய தமிழில் பேசி வருகிறார். அதேபோல, அவரது கட்சியினரும் போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றை தூய தமிழில் அச்சடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த சூழலில், திருமாவளவனின் பிறந்தநாள் ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அக்கட்சியினர் திருமாவளவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி இருக்கிறார்கள்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பெருநகர துணைச் செயலாளர் ராஜாமுகமது என்பவர், திருமாவளவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அந்த போஸ்டரில் ஆகஸ்ட் என்பதற்கு பதிலாக ஆகத்து என்று அச்சிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், சமூகநீதி காவலர் எழுச்சி தமிழர் என்கிற வாசகங்களில் ஒற்றெழுத்துக்கள் இடம்பெறவில்லை. இதைக் கண்ட தமிழ் ஆசிரியர் ஒருவர், தூய தமிழில் ஆகத்து என்று குறிப்பிட்டிருப்பது சரி. அதேசமயம், சமூகநீதிக் காவலர் என்பதிலும், எழுச்சித் தமிழர் என்பதிலும், ச் மற்றும் த் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டி பாடம் நடத்தி இருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it