காரல் மார்க்ஸ் குறித்து தமிழக கவர்னர் பேசியிருந்த நிலையில், கவர்னர் பெரிய மயிரு மாதிரி பேசக்கூடாது என்று வாய்த்துடுக்காகவும், இழிவாகவும் பேசியிருக்கிறார் சி.பி.ஐ. கட்சியின் முத்தரசன். சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின், அண்ணாதுரை, ஈரோடு ராமசாமி பற்றி உண்மைகளை கூறினாலே வழக்குப் பதிவு செய்யும் தி.மு.க., முத்தரசன் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் சிந்தனைதான் இந்தியாவை சீர்குலைத்தது. இந்தியாவை அழிக்க வேண்டும் என்பதற்காகவே, வரலாற்றில் திரபுகளை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், கஜினி முகமதுவின் 18 முறை படையெடுப்பு பற்றி வரலாற்றில் கூறியவர்கள், நமது மன்னர்களின் வீரவரலாறு குறித்து குறிப்பிடவே இல்லை. ஆகவேதான், இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் பேசிய, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நமது வரலாறுகள் திரித்து எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை மாற்றி எழுத வேண்டியது அவசியமாகும். அதற்கான தருணம் வந்துவிட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் கவர்னரும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், கவர்னரின் இந்த பேச்சுக்கு, கம்யூனிஸ்ட்கள் என்கிற போர்வையில் நம் நாட்டில் மறைந்திருக்கும் அந்நிய கைக்கூலிகள் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கட்டி வருகின்றனர். அந்த வகையில், கவர்னரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், பெரியசாமி உட்பட மாதர் சங்கத்தினரும், மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முத்தரசன், “ரவிக்கு வாய்க்கொழுப்பு அதிகம். இந்த வாய்க்கொழுப்பை அவர் அடக்கிக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகிவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு விஷயங்களிலும் அமைதி காத்து வருகிறோம். ஆனால், இதை கவர்னர் தவறாக புரிந்து கொண்டு தான் ஒரு எஜமானர் மாதிரியும், மாமன்னர் மாதிரியும், பெரிய மயிரை புடுங்கி மாதிரியும் பேசிக்கொண்டிருக்கிறார். இனிமேல் அவர் இந்த மாதிரி பேசினால், தலைமை என்ன சொல்லுது என்று காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் என்ன மாதிரி போராட்டம் நடத்தினாலும் கட்சி உங்களை அங்கீகரிக்கும். இந்த மாதிரி ஆட்களை எல்லாம் நடமாடவே விடக்கூடாது.
காரல் மார்க்ஸ் குறித்து அவர் தெரியாமல் தவறுதாலாகப் பேசிவிட்டார் என்று நான் கருதவில்லை. அவர் வெளியிட்ட கருத்து என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு 3 எதிரிகள். முதலில் இஸ்லாமியர்கள், இரண்டாவது கிறிஸ்தவர்கள், மூன்றாவது முக்கியமான எதிர்கள் கம்யூனிஸ்ட்கள். ரவிக்கு வாய்க்கொழுப்பு அதிகமாக இருக்கிற காரணத்தினால், அவர் நேரடியாக இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். ரவி அவர் சொன்ன கருத்தை திரும்பப் பெற வேண்டும். நாட்டு மக்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், இதே கருத்தை அவர் தொடர்ந்து பேசிவந்தார் என்றால், தமிழகத்தில் அவர் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும்” என்று கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் முத்தரசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரல் மார்க்ஸ் ஒரு அந்நிய நாட்டைச் சேர்ந்தவன். அவன் இந்தியாவைப் பற்றிய வரலாற்றை ஏன் எழுத வேண்டும். அவன் எழுதியதை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்திய கலாசாரத்துக்கும், இறையாண்மைக்கும் விரோதமாக காரல் மார்க்ஸ் எழுதியதை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு அந்நியனுக்கு இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும். இந்தியாவின் சிந்தனை வேறு. அந்நிய நாட்டு சிந்தனைகள் வேறு. அப்படி இருக்க அந்நிய நாட்டு சிந்தனையை இந்தியாவில் புகுத்த கம்யூனிஸ்ட்கள் ஏன் மெனக்கெடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்.
மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் ஹிந்து மதத்துக்கும் எதிர்மறையான சிந்தனைகளும், கருத்துக்களுமே விதைக்கப்படுகின்றனர். அதேபோல, ஹிந்து மதத்தின் மீதான வெறுப்புத் தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. ஹிந்து விரோத தி.மு.க. அரசு இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அதேசமயம், ஈரோடு ராமசாமியைப் பற்றியும், அண்ணாதுரையை பற்றியும், கருணாநிதி பற்றியும், ஸ்டாலின் பற்றியும் ஏதாவது விமர்சனம் செய்தால் கையாலாகாத தி.மு.க. அரசு கைது நடவடிக்கைகளை எடுக்கிறது. அதேபோல, தமிழகத்தின் உயர் பதவியில் இருக்கும் முதல் குடிமகனான கவர்னரை பற்றி அவதூறாகவும், அசிங்கமான வார்த்தைகளாலும் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்த அந்நிய நாட்டின் கைக்கூலி முத்தரசன் மீது நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.