பொய்களால் கட்டமைக்கப்பட்டது ஹிந்துத்துவா: ட்விட்டரில் சர்ச்சை பதிவு… கன்னட நடிகர் கைது!

பொய்களால் கட்டமைக்கப்பட்டது ஹிந்துத்துவா: ட்விட்டரில் சர்ச்சை பதிவு… கன்னட நடிகர் கைது!

Share it if you like it

பொய்களால் கட்டமைக்கப்பட்டது ஹிந்துத்துவா என்று ட்விட்டரில் அவதூறு பரப்பிய கன்னட நடிகரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் கன்னட திரைத்துறையில் நடிகராக வலம் வருபவர் சேத்தன் குமார் அஹிம்சா. சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பதிவில் ஹிந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை போட்டிருந்தார். அப்பதிவில், “சாவர்க்கர்: ராமர் ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பிய போது இந்திய ‘தேசம்’ தொடங்கியது -> ஒரு பொய். 1992: பாபர் மசூதி ‘ராமரின் பிறந்த இடம்’ -> ஒரு பொய். 2023: உரிகவுடா – நஞ்சேகவுடா திப்புவை ‘கொன்றார்கள்’ -> ஒரு பொய். ஹிந்துத்துவாவை உண்மையால் மட்டுமே தோற்கடிக்க முடியும். அந்த உண்மை சமத்துவம்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இப்பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, இது ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி, பெங்களூருவைச் சேர்ந்த பஜ்ரங் தளம் நிர்வாகி குமார் சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நடிகர் சேத்தனை கைது செய்து பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர், பிப்ரவரி 2022-ல், ஹிஜாப் வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் மீது ஆட்சேபனைக்குரிய வகையில் ட்வீட் செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it