அத வேற வாய்… இது நாற வாய்… திருமாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

அத வேற வாய்… இது நாற வாய்… திருமாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Share it if you like it

மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்திருப்பது நியாயமானது என்று கூறியிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, இது வேற வாய்… அது நாற வாய்… என்று நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடாக எல்லையில் மேக்கேதாட்டு என்கிற இடத்தில் தடுப்பணை கட்ட, அம்மாநில முந்தைய காங்கிரஸ் அரசு முயற்சி எடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று, 5,912 கோடி ரூபாய் செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.

அப்போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். கர்நாடகாவில் அடுத்து ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. தீவிர முயற்சி செய்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே கர்நாடகாவுக்கு சாதகமாக மேகதாது அணை கட்ட அனுமதி அளித்திருக்கிறார் அமித்ஷா என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளி விட்டார். எனினும், இதன் பிறகு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, மேகதாது அணை கட்ட முயற்சி எடுக்கவில்லை.

இந்த சூழலில், கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, மீண்டும் மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை காங்கிரஸ் அரசு தொடங்கி இருக்கிறது. இதன் வெளிப்பாடாக டெல்லி சென்றிருந்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் தரமுடியாது என்றும், மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமா, மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்கிற டி.கே.சிவக்குமாரின் கோரிக்கை நியாயமானது. சிவக்குமார் தனது மாநில நலனுக்காகவும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறார். அவரது தரப்பிலிருந்து பார்த்தால் அவரது கோரிக்கை நியாயமானது. அப்படித்தான் அவர் அந்த கோரிக்கை வைக்க முடியும், வைத்திருக்கிறார் என்றார்.

திருமாவின் இந்தக் கருத்துதான், பா.ஜ.க.வினர் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதே கருத்தை பா.ஜ.க. சொன்னால், அதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று கூறிய திருமா, காங்கிரஸ் கட்சி அதே கருத்தை சொல்லும்போது, அக்கோரிக்கை நியாயமானது என்கிறார். அப்படியானால் அது வேற வாய்… இது நாற வாய் போல… என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it