தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் ‘நகி’: கர்நாடக துணை முதல்வர் உறுதி… என்ன செய்யப் போகிறார் ஜெயகடா?!

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் ‘நகி’: கர்நாடக துணை முதல்வர் உறுதி… என்ன செய்யப் போகிறார் ஜெயகடா?!

Share it if you like it

இந்த முறை தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் டெல்லி சென்றிருக்கிறார். அங்கு ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசியவர், நிலுவையிலுள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், “கர்நாடகத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

இந்த சூழலில், காவிரி நிர்வாக ஆணையம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால், போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை. இந்த முறை தண்ணீர் வழங்க முடியாது. தவிர, பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் பழைய குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் பிரச்னை உண்டாகவில்லை. எனினும், தற்போது அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்துக்கு திறந்துவிடும் அளவுக்கு தண்ணீர் இல்லை.

மேகதாது திட்டம் குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன். இது தொடர்பாக, தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. மேகதாது திட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கூறியிருப்பதோடு, மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சியும் செய்து வருகிறது. இந்த சூழலில், தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க., கர்நாடகாவில் ஆளும்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் பேசி, தமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல காவிரி விவகாரத்தில் அரசியல் செய்துவிட்டு அமைதியாக இருந்து விடுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.


Share it if you like it