கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் ஹிஜாப்!

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் ஹிஜாப்!

Share it if you like it

கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் ஹிஜாப் விவகாரம் தலைதூக்கி இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் இருவர் வேண்டுமென்றே புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்ததோடு, முதல்வரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தங்களது பிள்ளைகளுக்கு வேண்டுமென்றே ஹிஜாப், புர்கா, பர்தா அணிவித்து பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வருகின்றனர். கர்நாடகாவில் மட்டுமே நிலவிவந்த இப்பிரச்னை தற்போது ஆந்திர மாநிலத்திலும் எதிரொலித்திருக்கிறது என்பதுதான் வேதனை.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருக்கிறது லயோலா கல்லூரி. இக்கல்லூரியில் ஏராளமான இஸ்லாமிய மாணவிகள் பயில்கின்றனர். இவர்கள் வீட்டிலிருந்து ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தால், கல்லூரியிலுள்ள பெண்கள் காத்திருப்பு அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொள்வது வழக்கம். நிலைமை இப்படி இருக்க, இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் பதான் சாதிகுன்னிசா, ஷேக் ரேஷ்மா ஆகிய இருவரும், இன்று (பிப்.18-ம் தேதி) காலை வேண்டுமென்றே கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்திருக்கிறார்கள்.

இதைக் கண்ட அக்கல்லூரியின் முதல்வர் ஜி.ஏ.பி.கிஷோர், ஹிஜாப், புர்கா அணிந்து வரும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், இரு அடிப்படைவாத மாணவிகளும், கல்லூரி முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, புர்கா உடையை மாற்றவும் மறுத்து விட்டனர். மேலும், தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்திருக்கிறார்கள். அவர்களும் வந்து கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, “கல்லூரியின் நடத்தை நெறிமுறைகளில் எந்த முஸ்லிம் ஆடையும் அனுமதிக்கப்படவில்லை. வகுப்பறைக்குள் யாரும் ஹிஜாப் அல்லது பர்தா அணிந்திருப்பதை நாங்கள் பார்த்ததில்லை. இங்கு பல முஸ்லிம் மாணவிகள் படிக்கிறார்கள். அவர்கள் தங்களது பாரம்பரிய உடையை காத்திருப்பு அறைக்குச் சென்று மாற்றிக் கொள்கிறார்கள். லயோலா கல்லூரி எந்த முஸ்லிம் உடையையும் அனுமதிக்காது” என்று கறாராக கூறியிருக்கிறார்.

ஆனாலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முதல்வர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், அக்கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Share it if you like it