நாங்க ஹிஜாப் அணிந்துதான் வருவோம்: ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதம்!

நாங்க ஹிஜாப் அணிந்துதான் வருவோம்: ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதம்!

Share it if you like it

ஹிஜாப் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணியக் கூடாது என்று கர்நாடக மாநில ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கும் நிலையில், பள்ளிகளுக்கு ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்ததோடு, நாங்க அப்படித்தான் வருவோம் என்று சொல்லி, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ. அரசு கல்லூரியில் பயிலும், இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர், ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்து, சீருடையில் வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதனால், அந்த மாணவிகள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஹிந்து மாணவிகள், நாங்களும் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வருகிறோம் என்று சொல்லி போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எனவே, இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, அனைவரும் சீருடை அணிந்துதான் வரவேண்டும். ஹிஜாப் உள்ளிட்ட எந்த உடையும் அணியக் கூடாது என்று உத்தரவிட்டது. இதை கண்டித்து இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த விவகாரம் மாநிலும் முழுவதும் பரவவே, பதட்டம் நிலவியது. எனவே, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, ஹிஜாப் அணிவது தங்களது உரிமை. ஆகவே, பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, 14-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை யாரும் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணியக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கோர்ட் உத்தரவையும் மீறி, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் தங்களது பிள்ளைகளுக்கு வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். ஆனால், அப்படி வந்த மாணவிகளை, பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர், பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், பள்ளி நிர்வாகங்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால், அவர்களின் பாச்சா பலிக்கவில்லை.


Share it if you like it