தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எனக்கு கொடுங்கள் என கார்த்தி சிதம்பரம் கேட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி எம்.பி. திருநாவுகரசர் அணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அணி, எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை அணி என்று பல்வேறு அணிகளை கொண்டு இயங்கும் ஒரே கட்சியாக தமிழக காங்கிரஸ் இருந்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் அக்கட்சியில் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதனிடையே, முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆதரவாளருக்கும், கே.எஸ். அழகிரியின் ஆதரவாளருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியின் அலுவலகத்தில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், தொண்டர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மோதலை தடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் கே.எஸ். அழகிரி. ஆனால், அவரும் களத்தில் இறங்கி கட்சி நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட சம்பவம்தான் இதில் ஹைலைட். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் டெல்லி மேலிடத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தனக்கு வேண்டும் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், டெல்லி தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.